Get A+ with YaClass!
Register now to understand any school subject with ease and get great results on your exams!

Theory:

உயிர் எழுத்துகள் 12   (அ முதல் ஔ வரை)
மெய் எழுத்துகள் 18   (க் முதல் ன் வரை)
உயிர்மெய் எழுத்துகள் 216 (க முதல் னௌ வரை)
ஆய்தம் 1 (ஃ)
மொத்தம் 247
  
உயிர் எழுத்துகள் – 12
  
அ, ஆ ஆகிய இரு உயிர் எழுத்துகளும் வாயைத் திறப்பதால் ஒலிக்கிறது.
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்துகளும் உதடுகளை விரிப்பதால் பிறக்கிறது.
 
உயிர்மெய் எழுத்துகள் (Vowel Consonants) – 216.

  

  • ஒரு மெய் எழுத்தும் ஓர் உயிர் எழுத்தும் சேர்ந்து பிறக்கக் கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து. (க்  +  அ  =  க).

  • மெய் எழுத்துகள் பதினெட்டும் (18), உயிர்எழுத்துகள் பன்னிரெண்டும் (12) சேர்ந்து (18x12=216) இருநூற்று பதினாறு (216) உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன. 

  • இவ்வெழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.

  • உயிர்மெய் குறில் எழுத்துகள்–90 (உயிர்க் குறில் 5x18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு ஒன்று.

  • உயிர்மெய் நெடில் எழுத்துகள் –126 (உயிர் நெடில் 7x18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.

  • 'க' வரிசை முதல் 'ன' வரிசை வரை என 18 வரிசைகளை அட்டவணையாகக் காண்போம்.

 

2.png

3 (1).png

4.png

5.png

6.png

ஆய்தம் (ஃ)

  • எஃகு - இச்சொல்லின் இடையில் அமைந்துள்ள எழுத்து ஆய்த எழுத்து.

  • ஃ - மூன்று புள்ளிகளைக் கொண்ட வடிவம்.

  • ஒலிக்கும் மாத்திரை அளவு அரை (1/2) 

  • மெய் அல்லது ஒற்று எழுத்தாகக் கருதுவர்.

  • அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற் புள்ளி என்னும் வேறுசில பெயா்களும் உண்டு. 

  • அஃகேனம் - 247 தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையில் தனித்த எண்ணிக்கை கொண்ட எழுத்து.

  • ஆனால், தனித்து தனித்து இயங்காது. தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், பின் ஒரு வல்லின உயிா்மெய் எழுத்தையும் சாா்ந்து வரும்.

  • தனித்த எண்ணிக்கை கொண்டதால் இதனைத் தனிநிலை எழுத்து என்று கூறுவர்.

 
அ.கி.பரந்தாமனார் அவர்கள் நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்னும் நூலில் மாத்திரை அளவைப் பற்றிப் பின் வருமாறு பதிவு செய்வதைக் காணலாம். 
  • கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிப் பொழுதும் மாத்திரை எனப்படும்.•இன்ன இன்ன எழுத்தை இவ்வளவு இவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பது மொழியின் அறிவியல் நிலையை எடுத்துக் காட்டுகிறது.
  • இச்சிறிய மணித்துளி அளவையும் பாகுபாடு செய்து கூறியிருப்பதைப் பாருங்கள்.”உன்னல் காலே ஊன்றல் அரையேமுறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே”
  • நினைப்பது  - கால் மாத்திரையாம் ;
  • இரண்டு விரல்களை ஊன்றல் – அரை மாத்திரையாம் ;
  • இரண்டு விரல்களை முறுக்கல் – முக்கால் மாத்திரையாம் ;
  • விடுத்தல் – ஒரு மாத்திரையாம்.
  • இத்தகைய அறிவியல் முறையில் மாத்திரையை விளக்குவது வியப்பளிக்கிறது.1.மெய்யெழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் – ½ மாத்திரை (ஒவ்வொன்றுக்கும்)2.உயிர்க் குறில், உயிர்மெய்க் குறில் – 1 மாத்திரை3.உயிர் நெடில், உயிர்மெய் நெடில் – 2 மாத்திரை 
மெய்யெழுத்துகளின் வகைகளான இனங்களைப் பாடலாகப் பாடுவோம் :
 
க்ச்ட்த்ப்ற் வல்லினமாம்.
ங்ஞ்ண்ம்ன் மெல்லினமாம்.
ய்ர்ல்வ்ழ்ள் இடையினமாம்.
யாவரும் இங்கே ஓரினமாம்.