Theory:
இவ்வகை விலங்குகளில் முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை.
|
1. துளையுடலிகள் (போரிபெரா):
- பல செல்களைக் கொண்ட, இயங்கும் தன்மையற்ற நீர் வாழ் உயிரிகள்.
- உடல் ஆஸ்டியா (Ostia) எனப்படும் எண்ணற்ற துளைகளால் ஆனது.
- உடல் சுவர் சட்டக அமைப்பை உருவாக்கும் ஸ்பிக்யூல்ஸ் (Spicules) என்னும் நுண்முட்களைக் கொண்டுள்ளது.
- இனப்பெருக்கம்:-பாலின மற்றும் பாலிலா முறை.
- எ.கா: யூபிலெக்டெல்லா, சைகான்.

துளையுடலிகள்
2. குழியுடலிகள் (சீலென்டிரேட்டா அல்லது நிடேரியா):
- கடல் மற்றும் சில நன்னீர் நிலைகளில் வாழ்வன.
- பல செல், திசு அளவிலான கட்டமைப்பு மற்றும் ஆரச் சமச்சீர் அமைப்பு பெற்றவை.
- உடல் சுவர்:- புற அடுக்கு (ectoderm), அக அடுக்கு (endoderm) என இரு அடுக்குகளாலானது .இவ்விரு அடுக்குகளுக்கிடையே மீசோகிளியா எனும் அடர் கூழ்மப்பொருள் உண்டு. இதில் சீலண்டிரான் என்னும் வயிற்றுக் குழி உள்ளது. இக்குழியானது வாய் துவாரத்தின் மூலம் வெளித் தொடர்பு கொண்டுள்ளது.
- வாயைச் சுற்றி சிறிய உணர் நீட்சிகள் உள்ளன.
- புறப்படையில் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் அமைந்துள்ளன.
- இனப்பெருக்கம்:- பாலின மற்றும் பாலிலா முறை.
- எ.கா: ஹைட்ரா, ஜெல்லி மீன்

குழியுடலிகள்
3. தட்டைப் புழுக்கள் (பிளாட்டிஹெல்மென்திஸ்):
- இருபக்கச் சமச்சீரானவை.
- உடற்குழி காணப்படுவதில்லை.
- மெய்யான உணவுக்கால்வாய் இருந்தாலும், அது முழுமையற்றதாகவே உள்ளது.
- பெரும்பாலும் ஒட்டுண்ணி வாழ்க்கையே வாழும்.
- சிறப்பு வாய்ந்த தொடர் செல்களால் கழிவு நீக்கமானது நடைபெறும்.
- இரு பால் உயிரிகள் - ஆண் மற்றும் பெண் இனப் பெருக்க உறுப்புகள் ஒரே உயிரியில் காணப்படும்.
- எ.கா: கல்லீரல் புழு, நாடாப்புழு. தட்டைப் புழுக்களில் கழிவுநீக்கமும் ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால் நடைபெறும்.

தட்டைப் புழுக்கள்
4. உருளைப் புழுக்கள் (நிமட்டோடா அல்லது அஸ்கிஹெல்மென்திஸ்):
- இருபக்கச் சமச்சீர், மூவடுக்குகள் கொண்ட விலங்கு
- பொய்யான உடற்குழிகளைக் கொண்டவை. பலவகை தனித்து மண்ணில் வாழ்பவை. சில ஒட்டுண்ணிப் புழுக்களாக வாழ்பவை.
- கண்டங்கள் அற்ற மேற்புறத்தில் கியூட்டிகள் என்னும் மெல்லியஉறையால் உடல் சூழப்பட்டுள்ளது.
- உடல் உருளை வடிவம் கொண்டவை, இரு முனைகளும் கூர்மையாகவும் உள்ளன. உருளைப் புழுக்களின் உணவுக்குழல் ஒரு நீண்ட குழாய் அமைப்புடையது.
- தனிப்பால் உயிரிகளான இவை யானைக்கால் நோய் மற்றும் ஆஸ்காரியாஸிஸ் ஆகியவற்றை தோற்றுவிக்கும்.
- எ.கா: ஆஸ்காரிஸ், உச்செரேரியா.

உருளைப் புழுக்கள்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/8/82/Sycon_sp.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Sponges_at_SAS_Transvaal_DSC09129.JPG/512px-Sponges_at_SAS_Transvaal_DSC09129.JPG
https://www.flickr.com/photos/noaaphotolib/9734258717
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/0b/Spongillidae_middle.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/Pagurus_prideaux.jpg/512px-Pagurus_prideaux.jpg
https://www.flickr.com/photos/usfwspacific/5565696408
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Mikrofoto.de-Hydra_15.jpg/512px-Mikrofoto.de-Hydra_15.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Aurelia_aurita_2.jpg/512px-Aurelia_aurita_2.jpg
https://www.flickr.com/photos/volvob12b/14231557292
https://www.flickr.com/photos/carolinabio/8225394736
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Fasciola_hepatica_%28Linnaeus%2C_1758%29_2013_000-2.jpg/512px-Fasciola_hepatica_%28Linnaeus%2C_1758%29_2013_000-2.jpg
https://www.flickr.com/photos/occbio/6414501563
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Taenia_solium_scolex_x400.jpg
https://www.flickr.com/photos/gtzecosan/15701719491
https://www.flickr.com/photos/occbio/6414497563
https://www.flickr.com/photos/gtzecosan/15703630875
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Enterobius_vermicularis-1.jpg/512px-Enterobius_vermicularis-1.jpg