Theory:

1. அமைப்பு நிலை:
 
செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் மேலும் திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவை பொருத்தும்,  ஒரு செல் மற்றும் பல செல் உயிரி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
 
PPT (2).png
அமைப்பு நிலையின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
 
2. கருநிலை அடுக்குகள்:
 
பல செல் உயிரிகளை சுவரில் காணப்படும் அடுக்குகளின் அடிப்படையில் ஈரடுக்கு, மூவடுக்கு உயிரிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
PPT (14).png
கருநிலை அடுக்குகளின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
 
3. சமச்சீர் தன்மை:
 
உடல் உறுப்புகள் அமைந்துள்ளதன் அடிப்படையில் ஆரச் சமச்சீர், இருபக்கச்  சமச்சீர் என இரண்டு   வகையாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.
Example:
அமீபா, ஹைட்ரா  மண்புழு
  • ஆரச் சமச்சீர்: ஓர் உயிரியின் உடலை எந்த ஒரு திசையில் மைய அச்சிலிருந்து பிரித்தாலும்ஒரே மாதிரியான சமமான இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும்.
Example:
நட்சத்திர மீன்
  • இருபக்கச் சமச்சீர்: மைய அச்சின் பிரித்தால் மட்டுமே இரு சம பாகங்கள் கிடைக்கும்.
Example:
முதலை 
PPT (9).png
சமச்சீர் தன்மையின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
 
4. உடற்குழி:
 
உடலினுள்ளே திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி உடற்குழி எனப்படும். உடற்குழியானது  உடல் சுவற்றிலிருந்து உணவுப் பாதையைப் பிரிக்கிறது. உண்மையான உடற்குழி அல்லது சீலோம் (Coelom) என்பது நடு அடுக்கினுள்ளே அமைந்துள்ளது.

 உடற்குழி இயல்பின் அடிப்படையில் \(3\) வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடற்குழி அற்றவை - நாடாப்புழு
  • போலி உடற்குழி உள்ளவை - உருளைப்புழு
  • உண்மை உடற்குழி உள்ளவைமண்புழு
PPT (6).png
உடற்குழி அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
 
5. முதுகு நாண்:
 
முதுகு நாணின் அடிப்படையில் விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:
  • முதுகு நாணற்றவை (Non-Chordata)
  • முதுகு நாணுள்ளவை (Chordata) - முதல் முதுகு நாணுள்ளவை (Prochordata) மற்றும் முதுகெலும்பிகள் (Vertebrata).
 
PPT (15).png
முதுகு நாணின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
இருசொல் பெயரிடும் முறை:
முதலில் உயிரினங்கள் பொது பெயர் கொண்டு அழைக்கப்பட்டன. அதனால் குழப்பம் ஏற்படவே உயிரினங்களுக்கு இருசொல் பெயரிடும் முறையை கரோலஸ் லின்னேயஸ்  அறிமுகப்படுத்தினார்.
 
512px-Carolus_Linnaeus._Line_engraving_by_F._Zuliani_after_Tramont_Wellcome_V0003602.jpg
கரோலஸ் லின்னேயஸ்
 
இரு சொல் பெயரிடும் முறையின் விதிகள் :
  • பேரினம் பெயர் முன்பாகவும், சிற்றினம் பெயர் பின்பாகவும் இருக்க வேண்டும்.
  • பேரினம் பெயர் முதல் எழுத்து பெரியதாகவும் ஒரே வார்த்தையாகவும் இருக்க வேண்டும்.
  • சிற்றினம் பெயர், சிறிய எழுத்துகளாகவும், தனிவார்த்தையாகவோ (அ) கூட்டுவார்த்தையாகவோ இருக்கவேண்டும்.
  • அச்சிடும் போது சாய்வாக அச்சிட வேண்டும், வலம் சார்ந்த சிறு எழுத்துக்களாக இருக்க வேண்டும்.
  • ஒரு தொகுப்பிற்கு ஒரே ஒரு நிலையான பெயர் மட்டும் இருக்க வேண்டும்.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3e/Organization_levels_mouse.svg/1024px-Organization_levels_mouse.svg.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/Figure_27_02_05.jpg/1024px-Figure_27_02_05.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Figure_33_01_01.jpg/1024px-Figure_33_01_01.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/6/66/Figure_27_02_04.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/6/66/Figure_27_02_04.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c2/Carolus_Linnaeus._Line_engraving_by_F._Zuliani_after_Tramont_Wellcome_V0003602.jpg/512px-Carolus_Linnaeus._Line_engraving_by_F._Zuliani_after_Tramont_Wellcome_V0003602.jpg