Theory:
5. வளைதசைப் புழுக்கள் (அன்னலிடா):
- இவை உண்மையான உடற்குழி (coelom) மற்றும் உறுப்புமண்டலங்களுடைய முதல் உயிரிகள்.
- இருபக்கச் சமச்சீரான விலங்குகளாகும்.
- சிறப்புப் பண்பு:- இயல்பு துண்டுபட்ட உடலமைப்பாகும்.
- இவற்றில் அனேகமான இனங்கள் மூடிய ரத்தச் சுற்றோட்டத்தையும் கொண்டுள்ளன.
- இடப்பெயர்ச்சி உறுப்புகள்:-செட்டாக்கள் மற்றும் பாரபோடியாக்கள்.
- இருபால் அல்லது ஒருபால் உயிரிகளாகும்.
- எ.கா: நீரிஸ், மண்புழு, அட்டை.

வளைதசைப் புழுக்கள்
6. கணுக்காலிகள் (ஆர்த்ரோபோடா):
- இது தலை, மார்பு, வயிறு என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- உடலின் மேற்புறத்தில் கைட்டின்பாதுகாப்பு உறையாக உள்ளது. அது வளரும் போது அதிலுள்ள புறச்சட்டகத்தின் அளவு மாறுபடுவதில்லை.
- தோலுரித்தல் (Moulting) எனும் நிகழ்வு நடைபெறும்.
- இதன் மூலம் இவற்றின் மேற்புற உறையாக உள்ள கைட்டின் உதிர்க்கப்படுகிறது.
- ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் (இரத்தம்) உடற்குழியானது நிரப்பப்பட்டுள்ளது.
- கழிவு நீக்க உறுப்புகள்:- மால்பீஜியன் குழல்களும், பச்சை சுரப்பிகளும் காணப்படுகின்றன.
- ஆண், பெண் இரண்டும் தனித்தனி உயிரிகளாக உள்ளன.
- எ.கா: இறால், நண்டு, கரப்பான்பூச்சி

கணுக்காலிகள்
7. மெல்லுடலிகள் (மொலஸ்கா):
- இவற்றின் உடல் பொதுவாக வழவழப்பானதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.
- இவை மிக மெலிதான ஓடுகளைக் கொண்டு இருக்கும்.
- நன்னீர், கடல்நீரில் வாழும் தன்மை பெற்ற மிகப்பெரிய தொகுதியைச் சேர்ந்த விலங்கினங்கள்.
- இவை தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்காக கால்சியம் கார்பனேட்டால் ஆன ஓட்டைச் சுரக்கின்றன.
- சுவாசம்:- செவுள்கள் (டினிடியம்) அல்லது நுரையீரல் மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ நடைபெறும்.
- எ.கா: தோட்டத்து நத்தை, ஆக்டோபஸ்.

மெல்லுடலிகள்
8. முட்தோலிகள் (எகைனோ டெர்மேட்டா):
- இவ்வுயிரினங்கள் கடலில் வாழ்பவை.
- இவை உண்மையான உடற்குழி கொண்டு, உறுப்பு மண்டல கட்டமைப்பு மற்றும் மூவடுக்கு அமைப்பு கொண்டவை.
- இளம் உயிரிகள் (லார்வாக்கள்):- இருபக்கச் சமச்சீர் கொண்டவை.
- முதிர் உயிரிகள்:- ஆரச் சமச்சீர் கொண்டவை.
- சிறப்புப் பண்பு:- திரவத்தினால் நிரம்பிய வாஸ்குலார் அமைப்பு (Water vascular system).
- எ.கா: நட்சத்திர மீன், கடல்குப்பி.

முட்தோலிகள்
9. அரைநாணிகள் (ஹெமிகார்டேடா):
- வடிவம்:- மென்மையான புழு வடிவம் கொண்டு, கண்டங்கள் அற்ற உடல்.
- இவை இருபக்க ஆரச் சமச்சீர் மற்றும் உண்மையான உடற்குழி கொண்டவை.
- இவை முதுநாண் உள்ள மற்றும் முதுகுநாணற்றவற்றின் பண்புகளைக் கொண்டவை.
- அரைநாணிகளுக்கு முதுகுநாண் இருப்பதில்லை.
- அரைநாணிகளுக்கு செவுள்கள் காணப்படும்.
- உணவூட்டம்:- இவை கசையிழைகளால் மேற்கொள்கின்றன.
- இவைகள் வளை தோண்டி வாழும் உயிரிகள்.
- எ.கா: பலனோகிலாஸஸ் (ஏகான் புழுக்கள்).

அரைநாணிகள்
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Eichelwurm_(cropped).jpg
https://en.wikipedia.org/wiki/Echinoderm#/media/File:Echinodermata.png
https://www.flickr.com/photos/nmbeinvertebrata/45902849942/in/photostream/
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Pulmonata_various_examples_3.jpg/512px-Pulmonata_various_examples_3.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/Phylum-Annelida-Diagram.jpg
https://www.flickr.com/photos/nmbeinvertebrata/45902849942/in/photostream/
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Pulmonata_various_examples_3.jpg/512px-Pulmonata_various_examples_3.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/Phylum-Annelida-Diagram.jpg