Theory:
சிறப்பு அம்சங்கள்:
- முதுகுநாண்
- முதுகுப்புற நரம்புவடம்
- இணை செவுள் பைகள்
- நீண்ட, கோல் போன்ற முதுகுநாண்
- மூவடுக்கு மற்றும் உண்மையான உடற்குழி
முதுகுநாணுள்ளவை, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
- முன்முதுகு நாணிகள்
- முதுகெலும்புள்ளவைகள்
1. முன்முதுகுநாணுள்ளவை (Prochordata):
முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படும். இவை இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனியா (மண்டையோடற்றவை) என்றழைக்கப்படுகின்றன.
இரண்டு துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
- வால்முதுகுநாணிகள் - யூரோ கார்டேட்டா லார்வாவின் வால் பகுதியில் முதுகுநாண்கள்.
- டியூனிக் என்னும் உறை உடலைச் சுற்றிலும் கொண்டவை.
- எ.கா:- அசிடியன்

முன்முதுகுநாணுள்ளவை
2. தலைமுதுகு நாணிகள் (செபாலோ கார்டேட்டா):
- கடல் வாழ் முதுகு நாணிகள்.
- இவற்றின் முக்கியப் பண்பு:- தலை முதல் வால் வரை உள்ள நீண்ட நிலையான முதுகுநாண்.
- முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.
- எ.கா: ஆம்பியாக்ஸிஸ்.

தலைமுதுகு நாணிகள்
3. முதுகெலும்பிகள் (Vertebrata):
முதுகெலும்பு அல்லது தண்டுவடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.
முதுகெலும்புடையவை ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வட்டவாயுடையன:
- வட்டவாயுடையவை
- தாடையற்ற முதுகெலும்பிகள்
- உடல் நீளமானது
- தோல் வழவழப்பாகவும், செதில்களற்றும் காணப்படும்.
- புற ஒட்டுண்ணிகளாக, மீன்களின் மேல் வாழ்க்கை நடத்துகின்றன.
- எ.கா: லாம்ப்ரே
(i) வகுப்பு: மீன்கள்
குளிர் இரத்தப் பிராணிகளான (Poikilothermic), நீர் வாழ் முதுகெலும்பிகள்
உடல்: தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது தாடைகளைப் பெற்ற இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது. இணைத் துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன. செதில்களைக் கொண்டது. செவுள்கள் வழியாக சுவாசம் நிகழ்கிறது.
இதயம்: இரு அறைகளைக் கொண்டது (ஆரிக்கிள், வென்டிரிக்கிள்).
முக்கியமான மீன் வகைகள்:
- குறுத்தெலும்பு மீன்கள்: இவற்றில் எலும்புச் சட்டகம் குறுத்தெலும்பினால் ஆனது.
Example:
எ.கா:- ஸ்கேட்ஸ், சுறா
- எலும்பு மீன்கள்: எலும்புச் சட்டகத்தைக் கொண்டவை.
Example:
எ.கா:- கெண்டை, மடவை

மீன்கள்
(ii) வகுப்பு: இருவாழ்விகள்
- முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த விலங்குகள். இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன.
- இதயம்: மூன்று அறை (இரண்டு ஆரிக்கிள்கள், ஒரு வென்டிரிக்கிள்)
- எ.கா: தவளை, தேரை

இருவாழ்விகள்
(iii) வகுப்பு: ஊர்வன
- இவை குளிர் இரத்தம் கொண்டவை.
- இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை.
- தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை.
- தோலின் மேற்புறத்தில் சொரசொரப்பான முட்கள் போன்ற செதில்கள் உள்ளன.
- பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
- சுவாசம்: நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
- இதயம்: மூன்று அறைகள் காணப்படும்.
- எ.கா: பல்லி, பாம்பு, ஆமை
Important!
முதலைகளில் மட்டும் நான்கு அறைகள்.

ஊர்வன
(iv) வகுப்பு: பறவைகள்
- முதுகெலும்பிகளில் முதலில் தோன்றிய வெப்ப ரத்த விலங்கு பறவை.
- உடல்: தலை, கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகள்.
- முன்னங்கால்கள்: இறக்கைகளாக மாற்றம் அடைந்து உள்ளன.
- பின்னங்கால்கள்: நடக்க, ஓட, நீந்த ஏற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன.
- சுவாசம்: காற்றறைகளைக் கொண்ட நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
- முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை.
- எ.கா: காகம், கழுகு, புறா, நெருப்புக்கோழி, கிளி

பறவைகள்
(v) வகுப்பு: பாலூட்டிகள்
- தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது.
- பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.
- பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை.
- அவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும்.
- பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.
- இதயம்: நான்கு அறைகளுடையது.
- முட்டையிடும் பாலூட்டிகளைத் தவிர (பிளாட்டிபஸ்) மற்றவை குட்டிகளை ஈனுகின்றன.
- உடல்: தலை, கழுத்து, வயிறு மற்றும் வால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- பாலூட்டும் சுரப்பிகள்: பெண் உயிரிகளில் காணப்படுகின்றன.
- வெளிக்காது மடல் இவற்றில் காணப்படுகிறது.
- சிறப்பம்சம்: தாய்–சேய் இணைப்புத்திசு
- எ.கா: முயல், மனிதன், எலி

பாலூட்டிகள்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/93/Ascidians.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Amphioxus.png/1024px-Amphioxus.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Amphioxus_whole.jpg/1024px-Amphioxus_whole.jpg
https://www.flickr.com/photos/tim_ellis/2452232957
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/European_reptiles_collage.jpg/1024px-European_reptiles_collage.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Bird_Diversity_2011.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c3/Mammal_Diversity.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Bird_Diversity_2011.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c3/Mammal_Diversity.png