PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
i. தட்டை எபிதீலியம்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_9_2.png
தட்டை எபிதீலியம்
 
அமைப்பு
  • மெல்லிய தட்டையான செல்கள், தெளிவான உட்கரு மற்றும் ஒழுங்கற்ற எல்லைகளைக் கொண்டது.
இருப்பிடம்
  • வாய்க்குழி, நுரையீரலின் நுண் காற்றுப்பைகள், சிறுநீரகத்தின் அண்மைச் சுருள்குழல், இரத்த நாளங்கள், தோல் மேல் உறை மற்றும் நாக்கு ஆகியவற்றில் மென்மையான பூச்சாக உள்ளது.
பணி
  • காயங்கள், வறண்டுப் போதல், நோய்க்கிருமிகள் புகுதல் இவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
ii. கனசதுர வடிவொத்த எபிதீலியம்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_10.png
கனசதுர வடிவொத்த எபிதீலியம்
 
அமைப்பு
  • ஒற்றை அடுக்கு கனசதுர செல்களால் ஆனது. மைய வட்ட வடிவ உட்கரு அமைந்துள்ளது.
இருப்பிடம்
  • தைராய்டு, உமிழ்நீர் சுரப்பிகள், வியர்வைச் சுரப்பி, கணையச் சுரப்பி, நாளமுள்ளச் சுரப்பி, சிறுகுடல், நெப்ரானின் குழல் பகுதியில் (சிறுநீரக குழல்) நுண் உறிஞ்சிகளாக உள்ளன. இதனால் உறிஞ்சும் பரப்பு அதிகரிக்கிறது.
பணி
  • சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
iii. தூண் எபிதீலியம்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_11.png
தூண் எபிதீலியம்
 
அமைப்பு
  • ஒற்றை அடுக்கு நீண்ட செல்களால் ஆனது. உட்கரு செல்லின் அடிப்பகுதியில் உள்ளது.
இருப்பிடம்
  • இரைப்பை, பித்தப்பை, பித்தநாளம், சிறுகுடல், பெருங்குடல், அண்டக்குழல், கோழைச் சவ்விலும் காணப்படுகிறது.
பணி
  • சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.