PDF chapter test TRY NOW

ஆக்குத்திசு மற்றும் நிலைத்த திசுவிற்கும் உள்ள வேறுபாடுகள்
ஆக்குத்திசு
நிலைத்த திசு
செல்கள் சிறியவை, கோள அல்லது பல்கோண வடிவமுள்ளவை மற்றும் வேறுபாடு இல்லை.செல்கள் பெரியவை, வேறுபாடு உடையது மற்றும் பல வடிவங்கள்  கொண்டவை.
சைட்டோபிளாஸம் அடர்த்தியானது. வெற்றிடங்கள் காணப்படுவதில்லை.உயிருள்ள நிலைத்த செல்களின் மையத்தில் பெரிய வெற்றிடங்கள் இருக்கும்.
செல்களுக்கு இடையே இடைவெளியில்லைசெல்களுக்கு இடையே இடைவெளி உண்டு.
செல்சுவர் மெல்லிய மற்றும் வளையும் தன்மையுடையது.செல் சுவர் தடித்தது.
நியூக்ளியஸ் பெரியது மற்றும் முக்கியத்துவம் கொண்டது.நியூக்ளியஸ் எளிதில் பார்க்க கூடியதில்லை.
தாவர உடலுக்கு உறுதி மற்றும் வளையும் தன்மை கொண்டது.உறுதியை மட்டுமே தரும்.
சைலம் மற்றும் ஃபுளோயத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
சைலம்
ஃபுளோயம்
நீர் மற்றும் கனிமங்களைக் கடத்தும்.கரிமக் கரைபொருட்கள் அல்லது உணவுப் பொருட்களைக் கடத்தும்.
ஒரே திசையில் கடத்தல் நடைபெறும். (தாவரத்தின் வேரிலிருந்து மேல் பகுதிக்கு)
இரு திசைகளிலும் கடத்தல் நடக்கிறது. (இலையிலிருந்து சேமிப்பு உறுப்புக்கு அல்லது
சேமிப்பு உறுப்பில் இருந்து வளரும் பாகங்களுக்கு.)
டிரக்கீடுகள் மற்றும் சைலக் குழாய்கள் மூலம் கடத்தும்.சல்லடைக் குழாய்கள் மூலம் கடத்தும்.
சைலக்குழாய்கள், டிரக்கீடுகள், சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்களால் ஆனவை.
துணை செல்கள், ஃபுளோயம் பாரன்கைமா,
சல்லடைக் கூறுகள் மற்றும் ஃபுளோயம் நார்களால் ஆனவை.