PDF chapter test TRY NOW

நிலைத்தத் திசுக்கள் என்பவை பகுப்படையும் திறனை (பிரிதல் திறன்) நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக இழந்த திசுக்களாகும். சில சமயங்களில் நிலைத்த திசுக்கள் பகுதிநேர அல்லது முழுநேர ஆக்குத்திசுவாக மாறுகின்றன.
இவை இரு வகைப்படும் அவை:
  1. எளியத்திசு
  2. கூட்டுத்திசு
I. எளியத்திசு
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசுக்கள் ஆகும்.
Example:
பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரன்கைமா
1. பாரன்கைமா
  
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_2.png
பாரன்கைமா திசுவின் நீள் மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்றம்
  
சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும். பாரன்கைமா இரு வகைப்படும் அவை:
 
(i) ஏரன்கைமா, (ii) குளோரன்கைமா
  • ஏரன்கைமா நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் ஏரன்கைமா எனப்படும்.
  • குளோரன்கைமா பாரன்கைமா திசு மீது ஒளிபடும் போது – பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து குளோரன்கைமாவாக மாறும்.
பாரன்கைமா செய்யும் பணிகள்:
 
வறண்ட நிலத்தில் வாழும் தாவரங்களில் பாரன்கைமா நீரை சேமிக்கிறது மற்றும் சதைப்பற்றுள்ள பகுதியை உடையது மேலும் உணவு சேமித்தல், உறிஞ்சுதல், மிதத்தல், சுரத்தல் மற்றும் பல பணிகளைச் செய்கிறது.
 
காய்கறி மற்றும் பழங்களில் பாரன்கைமா செய்யும் பணிகள்:
 
உருளைக்கிழங்கில் பாரன்கைமா வெற்றிடம் முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது. ஆப்பிளில் பாரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது.
 
2. கோலன்கைமா
  
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_3.png
கோலன்கைமா திசுவின் நீள் மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்றம்
  • நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
  • சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.
  • பணி: புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது.
  • தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
3. ஸ்கிளீரன்கைமா
  
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_4.png
ஸ்கிளீரன்கைமா திசுவின் நீள் மற்றும் குறுக்கு வெட்டுத் தோற்றம்
  • லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
  • முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது.
  • இரு வகைப்படும்: நார்கள், ஸ்கீளிரைடுகள்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_5.png
நார்கள், ஸ்கீளிரைடுகள்திசுக்கள்
 
அ. நார்கள்
  • நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது.
  • செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
  • \(1-3\) mm சில தாவரங்களில் \(20\) மீ முதல் \(550\) மிமீ வரை நீளமுடையவை, இதற்கான எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Example:
கன்னாபினஸ் சட்டைவா (சணல்)
கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை)
லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)
  • பணி: வலு தரும் திசுவாகும். எடுத்துக்காட்டு: சைலம் நார்கள்
ஆ. ஸ்கிளீரைடுகள்
  • அகன்று ஒற்றையாகவோ (அ) தொகுப்பாகக் காணப்படும்.
  • செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படும்.
  • பணி: பழங்கள் மற்றும் விதைகளின் உறைகளில் காணப்படுகிறது.
  • தாவரத்திற்கு வலு தரும் திசுவாகும்
Example:
பட்டாணி விதையுறை