PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ii. மெட்டாநிலை – I
  • குரோமோசோம்கள் மையத்தை நோக்கி நகர்ந்து தானாகவே ஒன்று சேர்க்கின்றன.
  • மைட்டாசிஸ் நிகழ்வைப் போல் ஒவ்வொரு குரோமோசோமின் இரு குரோமேடிட்களும் தனியாகப் பிரிவதில்லை.
  • சென்ட்ரோமியர் பகுப்படைவதில்லை.
iii. அனாநிலை – I
  • ஒவ்வொரு ஹோமோலோகஸ் குரோமோசோமும் அதன் இரு குரோமேடிட்களுடனும், பகுப்படையாத சென்ட்ரோமியர்களுடனும் செல்லின் எதிரெதிர் முனைகளை நோக்கி நகர்கின்றன.
  • இந்த குரோமோசோமின் நிலையானது டையாடு (Diad) எனப்படும்.
iv. டீலோநிலை – I
  • ஒருமய (ஹேப்ளாய்டு) எண்ணைக் கொண்ட குரோமோசோம்கள் அதன் முனையை அடைந்ததும் பிரிந்து நீட்சி அடைகின்றன.
  • நியூக்ளியார் சவ்வு மற்றும் நியூக்ளியோலஸ் மறுபடியும் தோன்றும் போது இருசேய் நியூக்ளியஸ்கள் தோன்றும்.
v. சைட்டோபிளாச பகுப்பு - I
 
சைட்டோபிளாச பகுப்பு நிகழும் போது இரு ஹேப்ளாய்டு செல்கள் தோன்றும்.
ஆ. ஹோமோடைபிக் பகுப்பு
இவ்வகை பகுப்பில், இரண்டு ஹேப்ளாய்டு செல்கள் முதல் மியாட்டிக் பகுப்பில் தோன்றி பகுப்படைந்து நான்கு ஹேப்ளாய்டு செல்கள் தோன்றும் (இது மைட்டாசிஸ் போன்றதொரு நிலை). தாய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை உள்ளது  போல் சேய் செல்களில் காணப்படும்.
 
இது \(5\) நிலைகளைக் கொண்டது. அவையாவன,  
  • புரோ நிலை – II
  • மெட்டாநிலை – II
  • அனாநிலை – II
  • டீலோநிலை – II
  • சைட்டோபிளாச பகுப்பு – II
i. புரோநிலை – II
  • சென்ட்ரியோல் இரண்டாக பகுப்படைந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு முனையை சென்றடைகிறது.
  • ஆஸ்டர்கள் மற்றும் எதிர் இழைகள் தோன்றிய பின் நியூக்ளியார் சவ்வும் நியூக்ளியோலசும் மறைய ஆரம்பிக்கிறது.
ii. மெட்டாநிலை – II
  • குரோமோசோம்கள் மையத்தில் வந்து அமைந்தவுடன், இரண்டு குரோமேடிட்களும் பிரிதல் அடைகின்றன.
iii. அனாநிலை – II
  • பிரிவு அடைந்த குரோமேடிட்கள் சேய் குரோமோசோம்களாகின்றன.
  • பின் கதிர் இழைகள் சுருங்குவதால் எதிரெதிர் முனையை அடையும்.
iv. டீலோநிலை – II
  • சேய் குரோமோசோம்கள் மையத்தை வந்து சேரும் போது நியூக்ளியார் சவ்வு மற்றும் நியூக்ளியோலஸ் தோன்றும்.
v. சைட்டோபிளாச பகுப்பு - II
  • நியூக்ளியார் பிரிந்த பிறகு ஒவ்வொரு ஒருமய (ஹேப்ளாய்டு) சேய் செல்லிலிருந்து இரண்டு செல்கள் தோன்றும்.
  • இதனால் ஒற்றைமய குரோமோசோம்களைக்  \((n)\) கொண்ட நான்கு செல்கள் தோன்றும்.
 
YCIND03062022_3837_Organisation_of_tissues_TM_9th_5.png
மியாசிஸ் பகுப்பு நிலை II