PDF chapter test TRY NOW

விலங்குகள் போல தாவரங்கள் எங்கும் நகர இயலாது என நாம் அறிவோம். விலங்குகள் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும். ஆனால், தாவரங்களால் அது இயலாது. எனவே, அவை சார்பசைவை பின்பற்றுகின்றன.
புற தூண்டுதலுக்கு ஏற்ப தாவரத்தின் ஒரு பகுதியோ அல்லது முழு தாவரமோ குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி இயக்கத்தினை மாற்றி கொள்ளுதல் சார்பசைவு எனப்படும்.
மேலும், அவற்றை நேர் மற்றும் எதிர் சார்பசைவினை பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன,
  • ஒளி சார்பசைவு
  • புவிச் சார்பசைவு
  • நீர் சார்பசைவு
  • தொடு சார்பசைவு
  • வேதிச் சார்பசைவு
சார்பசைவின் வகைகளைப் பற்றி விரிவாகக் காண்பதற்கு முன், நேர் மற்றும் எதிர் சார்பசைவு பற்றிக் காணலாம்.
 
நேர் சார்பசைவு
சார்பசைவானது, தூண்டலின் திசையை நோக்கி வளர்ந்தால், அது நேர் சார்பசைவு எனப்படும்.
Example:
தாவரத் தண்டு ஒளியை நோக்கி வளர்தல்
எதிர் சார்பசைவு
சார்பசைவானது, தூண்டலின் எதிர் திசையை நோக்கி வளர்ந்தால், அது எதிர் சார்பசைவு எனப்படும்.
Example:
வேர் சூரிய ஒளிக்கு எதிர் திசையில் வளர்தல்
ஒளி சார்பசைவு
தாவர பாகம் ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்ப நகர்தல், ஒளிச் சார்பசைவு எனப்படும்.
Example:
தாவர தண்டுப் பகுதி வளர்தல்
தாவரத் தண்டானது ஒளியை நோக்கி வளர்வதால், அது நேர் சார்பசைவு ஆகும். ஆனால், புவிஈர்ப்பு விசைக்கு எதிராக வளர்வதால் எதிர் சார்பசைவு கொண்டதாகும்.
 
shutterstock_1540480469.jpg
இரண்டாவது தாவரம், ஒளியை நோக்கி வளர்தல்
 
மற்றொரு எடுத்துக்காட்டு, சூரியகாந்தி செடி ஆகும். இது, சூரியனின் நகர்வுக்கு ஏற்ப கிழக்கில் இருந்து மேற்காக நகரும் தன்மை உடையது.
புவிச் சார்பசைவு
புவியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவர பாகம் வளர்தல், புவிச் சார்பசைவு எனப்படும்.
Example:
இதற்கு, சிறந்த எடுத்துக்காட்டு, தாவரத்தின் வேர் ஆகும்.
ஏனெனில், வேரானது புவியை நோக்கி, கீழ் புறம் வளரும் இயல்புடையது. ஆகவே, வேர் நேர் புவிச் சார்பசைவு உடையது எனவும், சூரிய ஒளிக்கு எதிர் சார்பசைவு உடையதும் ஆகும்.
 
shutterstock_1540480469.jpg
முதல் தாவரத்தின் வேர், புவிஈர்ப்பு விசையை நோக்கி வளர்தல்
நீர்ச் சார்பசைவு
நீரின் மூலம் ஏற்படும் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல், நீர்ச் சார்பசைவு என அழைக்கப்படும்.
Example:
தாவர வேர்
shutterstock_1541322737.jpg
தாவரத்தின் வேர் நீரின் மூலத்தை நோக்கி வளர்தல்
 
இப்படத்தில் முதலில் தாவர வேர் கீழே நேராக வளர்கிறது. பின் நீரின் இருப்புக்கு ஏற்ப வளைந்து வளர்கிறது.