PDF chapter test TRY NOW

செயல்பாடு I:
  • கோலியஸ் தாவரத்தில் இருந்து, ஒரு இலையை பறித்து சூரிய ஒளியில் வைக்கவும்.
  • பின் ஒரு இருட்டு அறையில் அதை \(24\) மணி நேரம் வைக்கவும். இதனால் ஸ்டார்ச் முழுமையாக நீக்கப்படும்.
  • அந்த இலையை ஒரு காகிதத்தில் வைத்து பச்சையம் உள்ள இடங்களை வரைந்து கொள்ள வேண்டும்.
  • அந்த இலையை சுடுதண்ணீரிலும், பின் ஆல்கஹாலில் முக்கி எடுத்தால் பச்சையம் நீக்கப்படும்.
  • அதனை அயோடின் கரைசல் உதவியுடன் ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தவும்.
விளைவு:
  • பச்சையம் உள்ள இடம் மட்டும் சோதனைக்கு பின் கருநீலமாக மாறும்.
  • இதன் மூலம் ஒளிச்சேர்க்கையில் பச்சையத்தின் முக்கியத்துவத்தை  அறியலாம்.
YCIND30052022_3817_Plant_physiology_3_1.png
செயல்பாடு II:
  • ஒரு தொட்டி செடியை இருட்டு அறையில் இரண்டு நாட்கள் வைக்கவும். ஸ்டார்ச்  இலைகளில் இருந்து நீங்கி விடும்.
  • ஒரு இலையில் இருபுறமும் கருப்பு நிற காகிதம் கொண்டு ஒட்டி வைத்து அதனை சூரியஒளி படுமாறு வைக்கவும்.
  • பின் அந்த இலையை சுடுதண்ணீரிலும், பின் ஆல்கஹாலில் முக்கி எடுத்தால் பச்சையம் நீக்கப்படும்.
  • அதனை அயோடின் கரைசல் உதவியுடன் ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தவும்.
விளைவு:

கருப்பு நிற காகிதம் ஒட்டிய இடத்தில் மட்டும் தவிர்த்து மற்ற இடங்கள் கரு நீல நிறமாக மாறும். இதன் மூலம் ஒளிச்சேர்க்கையில் பச்சையத்தின் முக்கியத்துவத்தை  அறியலாம்.
 
YCIND30052022_3817_Plant_physiology_2_1.png