PDF chapter test TRY NOW

தாவரங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் கொண்டவை. உணவுக்காகவோ இனப்பெருக்கத்துக்காகவோ விலங்குகள் போல தாவரங்கள் நகருவது இல்லை.
 
ஆனால், அவை சூரிய ஒளி, நீர், ஊட்டப் பொருட்கள் இவற்றை அடைய தத்தம் உடல் அசைவுகளை பயன்படுத்துகின்றன. ஒளி, வெப்பம், ஈர்ப்பு விசை இவற்றைக் கொண்டு உணர்வூட்டபட்டு, அந்த உணர்வுகளின் மூலம் இயங்குகின்றன.
 
சில எடுத்துக்காட்டுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.  
தொட்டாச்சிணுங்கி
இந்த செடி தன்னை தொட்டால் உடனே இலைகளை சுருக்கிக் கொள்ளும். இது, நடுக்கமுறு வளைதல் என்ற செயல்பாட்டினால் ஏற்படுகிறது.
 
BeFunky-collage (1).png
மைமோசா புடிக்கா
சூரியகாந்தி
இந்த தாவரமானது சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அதன் நகர்வுக்கு ஏற்ப தானும் நகரும் (கிழக்கில் இருந்து மேற்காக தன்னை மாற்றிக் கொள்ளும்).
 
sunflower-1627193_1280.jpg
ஹீலியாந்தஸ் அன்னுவஸ்
 
இவை யாவும், வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்பட்டு நிகழும் செயல்பாடுகள் ஆகும்.
 
இவற்றைப் பற்றி விரிவாக இப்பாடப் பகுதியில் காணலாம்.