PDF chapter test TRY NOW

பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களும் தனிமங்கள் எனப்படும் சில எளிமையான பொருட்களால் உருவாக்கப்படுகிறது.
Example:
எ.க.: செடிகள், பூனைகள், ஆப்பிள்கள், பாறைகள், கார்கள் மற்றும் நமது உடல் அனைத்திலும் தனிமங்கள் உள்ளன. 
எனவே அனைத்துப் பொருட்களுக்குமான கட்டமைப்பு தனிமங்களே ஆகும்.

இசை என்பது சில அடிப்படை இசைக் குறிப்புகளின் கலவையாகும். அதாவது ச, ரி, க, ம, ப, த என்பதே இசையின் அடிப்படை கட்டமைப்பாகும்.

  

தனிமங்களின் பண்புகள் அடிப்படையிலான வகைகள்:

  

YCIND22052022_3759_Ramamoorthi - Matter around us (Tamil 9th 2)_1.png

 

உலோகம் 

Example:
எ.கா.: காப்பர், குரோமியம், தங்கம், பாதரசம்.  

BeFunkycollage4.jpg

உலோகங்கள்  

அலோகம்

Example:
எ.கா.: கார்பன், ஆக்சிஜன், நியான், குளோரின்.
BeFunkycollage6.jpg

அலோகங்கள்

உலோகப்போலி

Example:
எ.கா.: போரான், சிலிகான், ஜெர்மானியம், ஆர்சனிக்.  

AlAlloys.jpg

உலோகப்போலி

  

ராபர்ட் பாயில் கூற்று:

  

shutterstock1518438446.jpg

ராபர்ட் பாயில்

  

எளிய பொருட்களாக பகுக்க முடியாத பொருட்களுக்கு தனிமங்கள் எனப் பெயரிட்டார். தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே வகையான அணுக்களால் ஆனவை என்று வரையறுத்துள்ளார்.

எ. கா.: அலுமினியம் என்னும் தனிமம் அலுமினியம் அணுக்களால் ஆனது. அலுமினிய அணுக்களிலிருந்து வேதியியல் ரீதியாக எளிமையான பொருட்களை பெறமுடியாது. ஆனால் அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் நைட்ரேட் மற்றும் அலுமினியம் சல்பேட் போன்ற சிக்கலான வேதிப்பொருட்களை உருவாக்க முடியும்.

அணு:

வேதிவினையில் ஈடுபடும் ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் அணுவாகும். இது தனித்தோ (அ) சேர்ந்தோ காணப்படும்.

Asset5w973 - Copy.png

 

மூலக்கூறு:

ஒரு தனிமம் அல்லது ஒரு சேர்மத்தின் மிகச்சிறிய துகள் மூலக்கூறாகும். இது தனித்துக் காணப்படும். இது பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

Asset5w973 - Copy (2).png

 

எ.கா.: ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் (H2) அணுக்கள் உள்ளன.

நீர் (H2O) மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் உள்ளன.

 

Asset4w943.png

 

நவீன ஆவர்த்தன அட்டவணையில் இதுவரை உள்ள 118 தனிமங்களில், \(92\) தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன, மற்ற 26 தனிமங்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. ஆனால், இத்தகைய 118 தனிமங்களிலிருந்து, கோடிக்கணக்கான சேர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவற்றில் சில இயற்கையானவை மற்றும் சில செயற்கையானவை.