PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சேர்மம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடியிருப்பதாகும்.
seermam.png
 
சேர்மத்திற்கான சில எடுத்துக்காட்டுகள்:
 
i. சர்க்கரையானது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்று தனிமங்களால் ஆனது. சர்க்கரையின் வேதியியல் வாய்பாடு C12H22O11.
 
sugar-g9505d14ff_1920.jpg
சர்க்கரை
 
ii. சோடியம் குளோரைடு என அழைக்கப்படும் சாதாரண உப்பு ஒரு சேர்மம் ஆகும். இது உணவிற்கு சுவையூட்டுகிறது. இது உலோகமான சோடியம் மற்றும் அலோகமான குளோரின் மூலம் உருவாகிறது.
 
salt-g50798bcb3_1920.jpg
உப்பு
பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சேர்மங்கள் உரம் தயாரிக்கப் பயன்படுகிறது. சிலிக்கான் சேர்மங்கள் கணிப்பொறித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃப்ளோரின் சேர்மங்கள் நம் பற்களை வலுப்படுத்த உதவும் பற்பசையில் பயன்படுத்தப்படுகிறது.
 
flame-gb6ff7f6a2_1920.jpg
பாஸ்பரஸ்
 
தனிமத்திற்கும் - சேர்மத்திற்குமிடையேயுள்ள வேறுபாடு:
 
தனிமம்:
 
i. ஒரே வகையான அணுக்களைக் கொண்டது. 
ii. ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் மிகச்சிறிய துகளான அணுவானது தன்னகத்தே கொண்டுள்ளது.
iii. வேதியியல் முறையில் எளிய பொருட்களாகப் பிரிக்க இயலாது.
 
சேர்மம்:
 
i. ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்களால் ஆனது.
ii. ஒரு சேர்மத்தின் அனைத்துப் பண்புகளையும் மூலக்கூறு தன்னகத்தே கொண்டுள்ளது. 
iii. வேதியியல் முறையில் தனிமங்களாகப் பிரிக்க இயலும்.