PDF chapter test TRY NOW

பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகத்தின் இயல்பு நிலையை கொண்டு கூழ்மங்களை வகைப்படுத்தல்:

 

1.
பரவிய நிலைமை - திண்மம்
பரவல் ஊடகம் - திண்மம்
கூழ்மத்தின் பெயர் - திண்மக் கரைசல்
எடுத்துக்காட்டு - உலோகக்கலவை, விலை உயர்ந்த கற்கள், வண்ணக் கண்ணாடி.
 
2.
பரவிய நிலைமை - திண்மம்
பரவல் ஊடகம் - திரவம்
கூழ்மத்தின் பெயர் - கரைசல்
எடுத்துக்காட்டு - வர்ணம், மை, முட்டையின் வெண்மைப் பகுதி.
  
3.
பரவிய நிலைமை - திண்மம்
பரவல் ஊடகம் - வாயு
கூழ்மத்தின் பெயர் - தூசிப்படலம்
எடுத்துக்காட்டு - புகை, தூசி.
  
4.
பரவிய நிலைமை - திரவம்
பரவல் ஊடகம் - திண்மம்
கூழ்மத்தின் பெயர் - கூழ்
எடுத்துக்காட்டு - தயிர், பாலாடைக்கட்டி, ஜெல்லி.
  
5.
பரவிய நிலைமை - திரவம்
பரவல் ஊடகம் - திரவம்
கூழ்மத்தின் பெயர் - பால்மம்
எடுத்துக்காட்டு - பால், வெண்ணெய், நீர் எண்ணெய் கலவை.
 
6.
பரவிய நிலைமை - திரவம்
பரவல் ஊடகம் - வாயு
கூழ்மத்தின் பெயர் - தூசிப்படலம்
எடுத்துக்காட்டு - மூடுபனி, பனி, மேகம்.
  
7.
பரவிய நிலைமை - வாயு
பரவல் ஊடகம் - திண்மம்
கூழ்மத்தின் பெயர் - திண்ம நுரை
எடுத்துக்காட்டு - கேக், ரொட்டி.
 
8.
பரவிய நிலைமை - வாயு
பரவல் ஊடகம் - திரவம்
கூழ்மத்தின் பெயர் - நுரை 
எடுத்துக்காட்டு - சோப்பு நுரை, காற்றூட்டப்பட்ட நீர்.