PDF chapter test TRY NOW

எளிய காய்ச்சி வடித்தல் என்பது ஒரு கரைசலிலிருந்து தூய திரவத்தைப் பெறுவதற்கான முறையாகும். இது ஆவியாதல் மற்றும் குளிர்வித்தல் மூலம் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
காய்ச்சி வடித்தல் = ஆவியாதல் + குளிர்வித்தல்
 
shutterstock1657517269.jpg
எளிய காய்ச்சி வடித்தல் முறை சாதனம்
 
காய்ச்சி வடித்தல் முறையில் ஒரு திரவக் கரைசலை வெப்பப்படுத்தும் போது ஆவியாகிறது. அதன் பின் அந்த ஆவியைக் குளிர்விக்கும் போது தூய திரவம் கிடைக்கிறது.
எடுத்துக்காட்டாக, பல வளர்ந்த நாடுகளில் கடல் நீரிலிருந்து குடிநீரை இம்முறையில் பிரிக்கப்படுகிறது. 25 K கொதிநிலை வேறுபாடுள்ள இரண்டு திரவங்கள் கொண்ட கரைசலைப் பிரித்தெடுக்க இம்முறையானது பயன்படுகிறது.
 
கடல் நீரை குடி நீராக மாற்றும் முறை:
  
காய்ச்சி வடித்தல் குடுவையானது ஒரு நீர் குளிர்விப்பான் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உபகரணத்தின் அமைப்பு கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சி வடித்தல் குடுவையில் உள்ள அடைப்பானின் ஒரு துளை வழியே வெப்பநிலைமானி செருகப்பட்டுள்ளது. வெப்பநிலைமானியின் குமிழி பக்கக் குழாய்க்குக் கீழே உள்ளவாறு அமைக்கப்பட்டுளளது.
 
industry-sea water  purification.jpg
கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை
  
காய்ச்சி வடிக்க வேண்டிய, உப்பு நீரை குடுவையில் எடுத்துக்கொண்டு கொதிக்கும் வரை சூடுபடுத்தப்படுகிறது பின் தூய நீராவியானது குளிர்விப்பானின் உட்குழாய் வழியே கடக்கிறது. ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய நீராக சேகரிப்பானில் சேகரிக்கப்படுகிறது. உப்பானது குடுவையின் அடியில் வண்டலாகத் தங்கி விடுகிறது.