PDF chapter test TRY NOW

கூழ்மக் கரைசல் என்பது பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் கொண்ட பலபடித்தான அமைப்பாகும்.
பரவிய நிலைமை அல்லது பரவல் ஊடகம் ஆகியவை திண்மம், திரவம் அல்லது வாயுவாக இருக்கும், மொத்தம் எட்டு வகையான வேறுபட்ட கூடுகைகள் உண்டு.
 
பிரௌனியன் இயக்கம்:
இது ஒரு இயக்கப் பண்பாகும், கூழ்மக் கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியால் பார்க்கும்போது, கூழ்மத் துகள்கள் இங்குமங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். இந்த நகர்வே பிரௌனியன் நகர்வு (அ) பிரௌனியன் இயக்கம் எனப்படுகிறது.
துகள்களின் பிரௌனியன் இயக்கத்திற்குக் காரணமாக அமைவது பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளுடன், பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமநிலையற்ற முறையில் மோதி கொள்வதே ஆகும்.
 
YCIND22052022_3759_Ramamoorthi - Matter around us (Tamil 9th 2)_4.png
  
டிண்டால் விளைவு:
\(1869\) ஆம் ஆண்டு டிண்டால் ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்பதை கண்டறிந்தார். இந்நிகழ்வு டிண்டால் விளைவு என்றும் அவ்வாறு ஒளிரும் பாதை டிண்டால் குவிகை வடிவு என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய நிகழ்வு உண்மைக் கரைசலில் உண்டாவதில்லை.
 
YCIND22052022_3759_Ramamoorthi - Matter around us (Tamil 9th 2)_5.png
 
shutterstock681291817.jpg
டிண்டால் குவிகை வடிவு
 
வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளி, ஒளிக்கற்றையாகத் தோன்றுவது மற்றும் வானம் நீலநிறமாகத் தோன்றுவதும் டிண்டால் விளைவினால் ஆகும்.
 
shutterstock92160625.jpg
டிண்டால் குவிகை வடிவின் பயன்