PUMPA - THE SMART LEARNING APP

Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!

Download now on Google Play
ஒரு பொருளின் வேகத்திலோ அல்லது திசையிலோ மாற்றம் ஏற்பட்டால் அப்பொருள் முடுக்கமடைவதாகக் கருதப்படுகிறது.
முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் ஆகும். அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும்.
\(\text{முடுக்கம்}\) \(=\) திசைவேக மாறுபாடு காலம்
 
\(\text{திசைவேக மாறுபாடு}\) \(=\) \(\text{இறுதித் திசைவேகம்}\ (v)\) \(–\) \(\text{தொடக்கத் திசைவேகம்} (u)\)
 
\(\text{முடுக்கம்}\ (a)\) \(=\) இறுதித் திசைவேகம் (v) – தொடக்கத் திசைவேகம் (u)காலம் (t) 
 
\(\text{முடுக்கம்}\ (a)\) \(=\) (v – u)t
 
முடுக்கத்தின் \(SI\) அலகு மீவி2  ஆகும். இது ஒரு வெக்டர் அளவாகும்.
 
முடுக்கம் இரண்டு வகைப்படும் அவைகள் முறையே,
  • நேர் முடுக்கம்,
  • எதிர் முடுக்கம்.
நேர் முடுக்கம்:
 
ஒரு பொருளின் திசைவேகமானதுகாலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் நேர் முடுக்கம் எனப்படும்.
 
\(v\ >\ u\) எனில், அதாவது, இறுதித் திசைவேகம், தொடக்கத் திசைவேகத்தை விட அதிகமாக இருந்தால், திசைவேகமானது நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். மேலும் முடுக்கம் நேர்மதிப்பு பெறும்.
 
எதிர் முடுக்கம்:
 
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர்முடுக்கம் எனப்படும்.
 
\(v\ < \ u\), அதாவது இறுதித் திசைவேகம், தொடக்க திசைவேகத்தை விடக் குறைவாக இருந்தால், திசைவேகமானது நேரம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர்மதிப்பு பெறும்.
 
\(v\ =\ u\), எனில் \(a\ =\ 0\). அதாவது, இறுதித் திசைவேகம் தொடக்க திசைவேகத்திற்குச் சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் சுழியாகும்.