PDF chapter test TRY NOW

ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது, அதன் திசைவேகத்தையும் கால இடைவெளியையும் பெருக்கினால், கிடைப்பது அப்பொருளின் இடப்பெயர்ச்சி ஆகும்.
  • ஒரு பொருளின் திசைவேகம் காலத்தைச் சார்ந்து எப்படி மாறுகிறது என்பதை திசைவேகம் - காலம் வரைபடத்திலிருந்து நம்மால் அறிய முடியும்.
  • இந்த வரைபடத்தில் காலம் \(X\) அச்சிலும், திசைவேகம் \(Y\) அச்சிலும் குறிப்பிட வேண்டும்.
  • ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் சென்றால் \(X\) அச்சுக்கு இணையான ஒரு நேர்கோடு கிடைக்கும்.
  • கீழே உள்ள வரைபடம் மகிழுந்து ஒன்று \(40\) \(\text {கி.மீ. / மணி}\) என்ற சீரான திசைவேகத்தில் பயணிப்பதைக் காட்டுகிறது.
YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_4.png
திசைவேகம் – காலம் வரைபடம்
 
எனவே, திசைவேகம் – காலம் வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு இடப்பெயர்ச்சியின் எண் மதிப்பிற்குச் சமமாகும். ஆகவே \(t\) என்ற கால இடைவெளியில், மகிழுந்தின் இடப்பெயர்ச்சி \(S\) கீழ் கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
 
\(S\) \(=\) \(AC\) \(\times\) \(CD\)
 
\(S\) \(=\) செவ்வகம் \(ABCD\)-ன் பரப்பளவு
 
வரைபடத்தில் நிழலாக்கப்பட்ட பகுதி தான் செவ்வகம் \(ABCD\)-ன் பரப்பளவு ஆகும்.