Learning

is

simple

and

fun!

Complete thousands of tasks, learn solutions and improve your grades!

Register now! Browse subjects

Theory:

தாவரங்கள் பல ஆண்டுகளாக அவை வாழும் வாழிடங்களின் சுற்றுச்சூழல் இடர்பாடுகளைக் கடந்து தொடர்ந்து வாழ்வதற்க்கேற்ற வகையில் அவற்றில் காணப்படும் சிறப்பம்சங்களே தகவமைப்புகள் எனப்படும்.
 
இத்தலைப்பின் கீழ் மூன்று விதமான தகவமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
 
1. பற்றுக்கம்பி (ஏறு கொடிகள்):
 
பற்றுக்கம்பியானது மெலிந்த தண்டுடைய தாவரங்களில் பற்றி ஏறும் அமைப்பைக் கொண்ட ஒரு உறுப்பாகும். ஓர் ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு தாவரங்கள் மேல் ஏறுவதற்க்கேதுவாக பற்றுக்கம்பி உள்ளது.
 
உதாரணம்:
  • இனிப்புப் பட்டாணி - சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.
  • பாகற்காய் - கோணமொட்டு பற்றுக் கம்பிகளாக மாற்றமடைகிறது.
tendrils-of-a-climber.jpg
 
2. பின்னு கொடி:
 
சில தாவரங்கள் நீண்ட, மெலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. அவை தானாக நேராக நிலைத்து நிற்கும் தன்மையற்றவை. அவை ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன.
 
உதாரணம்:
 
சங்குப் பூ, கொடி அவரை, மல்லிகை.
 
twiners-w798.jpg
 
3. முட்கள்:
 
சில தாவரங்கள் கூர்மையான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். இவை உண்மையில் இலைகளாகும்.
 
இது தாவரத்திற்கு இரு வகையில் உதவுகிறது. தாவரத்திலிருந்து நீர் ஆவியாதலை குறைக்கிறது. தாவரத்தை  ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது.
 
உதாரணம்:
 
1. அகேவ் (ரயில் கற்றாழை) -  இந்த வகைக் கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.
 
2. சப்பாத்திக் கள்ளி - சப்பாத்திக் கள்ளியில் இலைகள் சிறுமுட்களாக மாறியுள்ளன.
 
3. காகிதப் பூ - தன்துப் பகுதியில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன.
 
green-5136258_1920.jpg