Register for free to see more content

Theory:

நிலப்பரப்பில் அமைந்துள்ள வாழிடங்கள் நிலவாழிடங்கள் என அழைக்கப்படுகின்றன. உலகில் \(28\%\) நில வாழிடங்கள் உள்ளன.
 
இது காடுகள், புல்வெளிகளைப் போன்ற இயற்கை வாழிடங்களை மற்றும் பண்ணைகள், நகரங்கள், மாநகரங்கள் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட வாழிடங்களையும்  கொண்டது.
 
நிலவாழிடங்கள் மூன்று வகைப்படும். அவை:
 
1. பாலைவனங்கள்
 
2. புல்வெளிகள்
 
3. காடுகள்
 
பாலைவனங்கள்:
 
நீரின் அளவு மிகக் குறைவாக உள்ள வாழிடங்கள் பாலைவனங்கள் எனப்படும். இவை பூமியின் மிகவும் வறண்ட மற்றும் மிக குறைவான மழை பெறும் இடங்களாகும் (\(25\) செ.மீக்கும் கீழ்).
 
pink-sand-dunes-65310_1920.jpg
 
இங்குள்ள தாவரங்கள் அதிக வெப்பம் மற்றும் குறைந்த அளவு நீர் இருப்பை எதிர்கொள்ள சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.
 
பாலைவன தாவரங்களின் சில பண்புகள்:
 
பாலைவனத் தாவரங்கள் நீரையும், கனிம உப்புக்களையும் சேமித்து வைக்கும் தடிமனான இலைகளைப் பெற்றுள்ளன. கள்ளித் தாவரம் போன்ற தாவரங்கள் தண்டில் நீரைச் சேமித்து வைத்துருக்கின்றன, அதன் இலைகள் முட்களாக மாற்றமடைந்துள்ளன.
 
africa-1933329_1920-w1917.jpg
 
இவை நன்கு வளர்ச்சியடைந்த நீளமான வேர்களைக் கொண்டுள்ளதால் மண்ணில் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன.
 
தார் பாலைவனமானது இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவன வாழிடமாகும்.
 
இவ்வாழிடங்கள் மிகவும் குறைவான மழைப்பொழிவையே பெறுகின்றன(25 செ.மீக்கும் கீழ்).
 
புல்வெளி வாழிடம்:
 
இவ்வகை வாழிடத்தில் புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்புற்கள் 2 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. உதாரணம்- சவானா புல்வெளி.
 
காடுகள்:
 
1. காடுகள் மிகப் பரந்த நிலப்பரப்பில் அதிகமான மரங்களைக் கொண்டுள்ளன. வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் காடுகள் வெப்ப மண்டலக்காடுகள் என்கிறோம்.
 
2. மித வெப்ப மண்டலத்தில் காணப்படும் காடுகள் குளிர் பிரதேச காடுகள் என்றும், மலைப்பகுதிகளிலுள்ள காடுகளை மழைக்காடுகள் என்றும் வகைப்படுத்துகிறோம்.
 
3. இங்கு ஆண்டு சராசரி மழை அளவு \(25-200\) செ.மீட்டராக இருக்கும்.
 
nature-3616194_1920.jpg