Get A+ with YaClass!
Register now to understand any school subject with ease and get great results on your exams!

Theory:

சில தாவரங்கள் மலைவாழ் இடங்களில் வாழ்கின்றன, சில தாவரங்கள் சமவெளிகளில் வாழ்கின்றன மேலும் சில நீர்வாழ் இடங்களிலும் வாழ்கின்றது. அதைப் போன்று மலையில் காணப்படும் விலங்குகளும் ஆழ்கடலில் காணப்படும் விலங்குகளும் வேறுபட்டவை. எனவே, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வெவ்வேறு வாழிடங்கள் உள்ளன.
ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் அதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடமே அதன் வாழிடம் ஆகும்.
வாழிடங்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை:
 
1. நீர் வாழிடம்
 
2. நில வாழிடம்
நீர் வாழிடம்:
நீர் நிறைந்த வாழிடங்கள் நீர் வாழிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நீரானது நன்னீராக இருப்பின் நன்னீர் வாழிடம் என்றும்; நீரானது கடல்நீர் அல்லது உப்பு நீராக இருப்பின் கடல் நீர் வாழிடம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
நன்னீர் வாழிடம்:
நன்னீர் வாழிடத்தில் வாழும் தாவரங்கள் சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டுள்ளது. நீர் பதுமராகம், அல்லி, தாமரை ஆகியவை நன்னீர் வாழ்  தாவரங்கள் ஆகும்.
  
இத்தாவரங்கள் குளம் மற்றும் ஏரிகளில் மிதக்க ஏற்றவாறு, நீர்வாழ் தாவரங்களின் தண்டுகள் மற்றும் இலைகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.
  
உதாரணம்:
 
ஆறுகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள் போன்றவை நன்னீர் வாழிடங்கள்.
உங்களுக்கு தெரியுமா?
 
இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை \((2500 கி.மீ)\), இது மிகப்பெரிய நன்னீர் மண்டலம் ஆகும். உலகின் மிக நீளமான நதி நைல் நதியாகும் \((6650 கி.மீ)\).
கடல் நீர் வாழிடம்:
 
புவியின் \(70\) சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. பல்வேறு தாவரங்களையும், விலங்குகளையும் பெருங்கடல்கள் கொண்டுள்ளன.
 
உதாரணம்:
 
கடல் பாசிகள், கடல் புற்கள், சதுப்பு நிலப் புற்கள் மற்றும் தாவர மிதவைகள் போன்றவை கடல்வாழ் தாவரங்களாகும்.
உங்களுக்கு தெரியுமா?
 
ராட்சத கெல்ப் (Giant kelp) எனப்படும் கடற்பாசி \(30\) மீட்டர் வரை வளரும் மிகப் பெரிய பாசி ஆகும்.
 
White-spotted_puffer.jpg