LEARNATHON
III

Competition for grade 6 to 10 students! Learn, solve tests and earn prizes!

Learn more

Theory:

உங்களுக்கு தெரியுமா?
 
வாணியும் ரவியும் காய்கறி சந்தைக்கு சென்றனர். பலவகையான கவர்ச்சிகரமான வண்ணங்களில் புதிய பச்சை காய்கறிகளை அவர்கள் பார்த்தார்கள். வாணி தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை வாங்கினார். ரவி வாணியிடம "இங்குள்ள அனைத்து காய்கறிகளும் மண்ணின் மேல் வளருமா?" என்று கேட்டார். வாணி இல்லை என்று பதிலளித்தார்.
 
மேலும் காய்கறிகள் மட்டுமல்லாமல், சில தண்டுகள், சில வேர்கள். சில பூக்கள் கூட சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ரவி, செடியின் வெவ்வேறு பகுதிகள் சமலையலுக்கு தேவையான பொருட்களாக பயன்படுவதை அறிந்து ஆச்சரியமடைந்தார்.
 
வீடு திரும்பிய பிறகு அவர்கள் பையிலிருந்த அனைத்து காய்கறிகளையும் தண்டு, வேர் மற்றும் பூவிலிருந்து வந்தவை என வரிசைப்படுத்தினர். வாணி தோட்டத்திலிருந்து மருத்துவ மதிப்பு மற்றும் நறுமணத்தை சேர்க்கும் கீழாநெல்லி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேகரித்து, இந்த இலைகளை சமையலில் பயன்படுத்துவதன் நோக்கத்தை கூறினார்.

அறிமுகம்:

 

தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு இயற்கை அறிவியல் உயிரியல் ஆகும். இந்த உலகம் தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கியது. தாவரங்கள் உணவைத் தானே தயார் செய்து தானே வளர்ந்து கொள்ளும். தாவரங்களின் பல்வேறு பகுதிகள் உணவு, மருந்து, மற்றும் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

 

பல்வேறு தாவரங்கள் நிறங்களிலும் அமைப்பிலும் வேறுபட்டாலும், அவை ஒரு சில ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன.

 

பெரும்பாலான தாவரங்கள் பின்வரும் பொது அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை; 

 

1. வேர்த் தொகுப்பு

 

2. தண்டுத் தொகுப்பு

 

Mathematics - 2021-10-13T165657.549.png

வேர்த் தொகுப்பு:

வேர்கள் தண்டின் அடிப்பகுதியில், நிலத்தின் கீழ்காணப்படுகின்றன. வேர்கள் "நேர் புவிநாட்டம்" உடையவை, அவை புவிஈர்ப்பு விசையினால் கீழ்நோக்கி வளர்கின்றன.

 

வேர்களின் பணிகள் பின்வருமாறு:

 

வேர்கள் தாவரத்தை பூமியில் நிலை நிறுத்தி அதிக நிலைத்தன்மையை கொடுக்கிறது. மண்ணிலிருந்து நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சுகின்றது. சில தாவரங்கள், அவை தயாரித்த எஞ்சிய உணவை அதன் வேர்களில் சேமிக்கின்றன.

 

உதாரணம்: கேரட், பீட்ரூட்,.

 

தாவரங்களின் வேர்த்தொகுப்பு இரு வகைப்படும். அவை:

  

1. ஆணி வேர்த்தொகுப்பு

  

2. சல்லி வேர்த்தொகுப்பு

 
ஆணி வேர்த்தொகுப்பு:
 
இந்த வேர்த்தொகுப்பானது மண்ணை நோக்கி வளரும் ஒரு முதன்மை வேரைக் (முதல்நிலை வேரை) கொண்டுள்ளது. இவ்வேரிலிருந்து துணை வேர்கள் தோன்றுகின்றன. இத்துணை வேர்கள் இரண்டாம்நிலை வேர்களாகவும், மூன்றாம்நிலை வேர்களாகவும் உருவெடுக்கின்றன.
 
உதாரணம்:மாமரம், வேம்பு  மரம், அவரைச்செடி ,.
 
சல்லி வேர்த்தொகுப்பு:
 
சல்லி வேர்த்தொகுப்பில் தண்டின் அடிப்பகுதியில்; சம பருமனுள்ள வேர்கள் கொத்தாக தோன்றி வளர்கின்றன. இவை ஆணி வேர்த்தொகுப்பைப் போன்ற ஒழுங்கு அமைப்பு அற்றவை.
 
உதாரணம்: நெல், புல், மக்காச் சோளம் போன்ற பல ஒரு வித்திலைத் தாவரங்கள்,.
மேலும் தெரிந்து கொள்வோம்:
 
1. தாவரங்களை பூவின் அடிப்படையில் எப்படி வகைப்படுத்துவது?
  • பூக்கும் தாவரங்கள்
  • பூக்காத தாவரங்கள்
 
2. தாவரங்களை விதையின் அடிப்படையில் எப்படி வகைப்படுத்துவது?
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைகளை உடையவை)
  • ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைகளை உடையவை)