Register for free to see more content

Theory:

நாம் எப்பொழுதும் மீட்டர் மற்றும் சென்டிமீட்டர் போன்ற அலகுகளை பயன்படுதுவோம். ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு மாற்றுவது எப்படி என்பதை காண்போம்.
 
ஒரு மில்லிமீட்டர் (மி.மீ) என்பது ஒரு சென்டிமீட்டரின் (செ.மீ) பத்தில் ஒரு பங்கு.
 
1 செ.மீ = 10 மி.மீ
 
ஒரு சென்டிமீட்டர் (செ.மீ) என்பது ஒரு மீட்டரின் (மீ) நூறில் ஒரு பங்கு.
 
1 மீ = 100 செ.மீ
 
1000 மீட்டர் (மீ) என்பது ஒரு கிலோமீட்டரை (கி.மீ) குறிக்கும்.
 
1 கி.மீ = 1000 மீ
 
ஒரு அளவை மில்லிமீட்டரிலிருந்து (மி.மீ) சென்டிமீட்டருக்கு (செ.மீ) மாற்ற அதை பத்தால் வகுக்க வேண்டும். ஒரு அளவை சென்டிமீட்டரிலிருந்து (செ.மீ) மில்லிமீட்டருக்கு (மி.மீ) மாற்ற அதை பத்தால் பெருக்க வேண்டும்.
 
உதாரணம்:
 
ஒரு கிலோமீட்டரை (கி.மீ) சென்டிமீட்டருக்கு (செ.மீ) மாற்றுக.
  
\(1\) கி.மீ \(= 1000\) மீ
  
\(1\) மீ \(= 100\) செ.மீ எனில்,
  
எனவே, கிலோமீட்டரை (கி.மீ) சென்டிமீட்டராக (செ.மீ) மாற்ற, கொடுக்கப்பட்ட எண் \(1\) ஐ \(100000\) ஆல் பெருக்கவும்.
  
\(1\) கி.மீ \(= 1000 × 100\) செ.மீ \(1\) கி.மீ \(= 100000\) செ.மீ.
 
மற்ற அலகு மாற்றங்களை கீழே உள்ள அட்டவணையில் காண்போம்.
 
முன்னொட்டு
குறியீடு
பன்மடங்கு/ துணைப் பன்மடங்குகள்
மீட்டருக்கு....
டெசி
\(d\)
110or101
\(10\) டெசி.மீ \(= 1\) மீ
சென்டி
\(c\)
1100or102
\(1000\) மி.மீ \(= 1\) மீ
மில்லி
\(m\)
11000or103
\(1000\) மி.மீ \(=\) \(1\) மீ
நானோ
\(n\)
11000000000or109
\(1000000000\) நானோ.மீ \(= 1\) மீ
கிலோ
\(k\)
1000or103
\(1\) கி.மீ \(= 1000\) மீ
 
நீளத்தை அளவிடும் கருவிகள்:
 
பொருட்களின் நீளத்தை அளக்க \(16\)-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் அளவுக்கோளை அல்லது மீட்டர் அளவையை  வடிவமைத்தார்.
 
ruler-146428_1280.png
 

சிறிய நீளங்களை அளக்க அளவை நாடா பயன்படுகிறது. 

  

measuring-tape-789899_1280.jpg
 
வாகனங்கள் கடக்கும் தூரத்தை அளக்க ஓடோமீட்டர் பயன்படுகிறது. பேருந்து போன்ற வாகனங்களில் முகப்பில் இந்த கருவியை காணலாம்.
  
6963327133_8a34160c3d_c.jpg
 
Important!
பாரிஸில் உள்ள Bureau of Weights and Measures எனும் அமைப்பில், பிளாட்டினம் மற்றும் இரிடியம் கலந்த ஒரு நிலையான மீற்றரளவைத்தண்டு உள்ளது. இதனுடைய மாதிரியானது புது தில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Reference:
https://www.flickr.com/photos/nicholas_t/6963327133