Theory:
வளைகோட்டின் நீளத்தை அளவிடும் முறைகள்
1. நூல் அல்லது சிறிய கயிறைக் கொண்டு அளக்கலாம்.
2. வாக்குப்பானைப் பயன்படுத்தி அளக்கலாம்.
நூல் அல்லது சிறிய கயிறைக் கொண்டு அளத்தல்
வளைந்த கோடுகளின் நீளத்தை நூல் அல்லது சிறிய கயிறைக் கொண்டு அளக்கலாம்.

1. ஒரு காகிதத்தின் பக்கத்தில் \(AB\) என்ற வளை கோட்டை வரையவும்.
2. நூலை அந்த வளை கோட்டின் மீது, அதன் அனைத்துப் பகுதிகளையும் தொடும் வகையில் வைக்கவும்.
3. \(A\) மற்றும் \(B\) முனைகளை நூலில் உள்ள புள்ளிகளில் குறிக்கவும்.
4. பிறகு அந்த வளைந்த நிலையில் உள்ள நூலை நேராக்கி, மீட்டர் அளவுகோல் கொண்டு அதன் நீளத்தை அளக்கவும்.
5. இந்த நீளம், வளைகோட்டின் நீளமாகும்.
கவையைப் பயன்படுத்தி அளத்தல்
1. ஒரு காகிதத்தின் பக்கத்தில் \(AB\) என்ற வளைகோட்டை வரையவும்.
2. கவையின் இரு முனைகளை அளவுகோலைக் கொண்டு \(0.5\) செ.மீ. அல்லது \(1\) செ.மீ. இடைவெளி உள்ளவாறு பிரிக்கவும்.
3. கவையின் ஒரு முனையை, வளைந்த கோட்டின் முனையில் வைத்து வளைவு வரை அளக்கவும்.
4. அந்த வளைவிலிருந்து அடுத்த வளைவு வரை அதே முறையைப் பயன்படுத்தி அளக்கவும்.
5. சமமான அளவுள்ள கோடுகளின் நீளங்களையும் அதன் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ளவும்.
6. கடைசி பாகத்தின் அளவு குறைவாக இருந்தால் அதன் நீளத்தை அளவுகோல் கொண்டு அளக்கவும்.
7. மொத்த நீளத்தைக் கணக்கிட சம அளவின் நீளத்தையும், அதன் எண்ணிக்கையையும் பெருக்கி மீதமுள்ள நீளத்தைக் கூட்டவும்.
எனவே, வளைகோட்டின் நீளம் = (சம அளவு பாகத்தின் நீளம் × பாகங்களின் எண்ணிக்கை) + மீதமுள்ள நீளம்