PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளுக்கும் அளவீடுகளின் அடிப்படையாக அமைகின்றன. அளவீட்டின் தரத்தை கீழக்கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி விவரிக்கலாம்.
 
  • பிழை
  • துல்லியத் தன்மை
  • நுட்பம்
  • தோராயமாக்கல்
  • முழுமையாக்கல்
பிழை

ஒவ்வொரு அளவீடும் சில நிலையற்றதன்மையைக் கொண்டுள்ளது. இந்த நிலையற்ற தன்மையே ‘பிழை’ எனப்படுகிறது.

shutterstock_1335179765.jpg

 

சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்பிற்கும், கணக்கிடப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு ‘பிழை’ என வரையறுக்கப்படுகிறது. அளவீடுகளை மேற்கொள்ளும்போது பிழைகள் குறைவாக இருந்தால் அளவிடப்படும் அளவு துல்லியமாகவும் நுட்பமாகவும் இருக்கும்.

துல்லியத் தன்மை

துல்லியத் தன்மை என்பது, கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. 

விளக்கம்

 

நீங்கள் ஒரு கடையில் \(3.5\) கிலோ ஆப்பிளை தராசைக் கொண்டு அளந்து வாங்கியுள்ளீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். உங்கள் வீட்டிற்குச் செல்லும் வழியில், வேறு கடையில் எண்ணிலக்க வகை தராசு மூலம் ஆப்பிள்களை மீண்டும் எடைபோடுகிறீர்கள். இப்போது, ​​ஆப்பிள்களின் எடை \(3.3\) கிலோ மட்டுமே.

 

horizontalappleweightcontrolweighroyaltyfreethumbnail.jpg

 

இங்கே, தராசைக் கொண்டு பெற்ற அளவீடு தவறானதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை வாங்கிய ஆப்பிள் எண்ணிலக்க வகை தராசு மூலம் \(3.5\) கிலோவை அளந்தால், அந்த அளவீடு துல்லியமாக கருதப்படுகிறது. 

நுட்பம்:

நுட்பம் என்பது, மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன என்பதைக் குறிக்கிறது.

விளக்கம்:

 

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஆப்பிள்களின் பொதியை எடை அளப்பதாக வைத்துக்கொள்வோம். அவை ஒவ்வொரு முறையும் \(3.5\) கிலோ எடையுள்ளதாக இருந்தால், அளவீடு மிகவும் துல்லியமானது எனலாம். அளவீடு வேறுபட்டால், அது துல்லியமாக கருதப்படுகிறது.

 

குறிப்பு

 

துல்லியம் மற்றும் நுட்பம் ஆகிய இரண்டும் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், அவை இரண்டும் ஒன்றல்ல.

 

விளக்கம்

 

இலக்கை நோக்கி மூன்று நபர்களால் எய்யப்பட்ட மூன்று வெவ்வேறு அம்புகளை படத்தில் பார்க்கவும். 

 

pic3.png

 

முதல் படத்தில் மூன்று அம்புகளும் மையத்தை நோக்கி எய்யப்பட்டுள்ளன. இப்படத்தின் மூலம் முதலாவது நபர் துல்லியமாகவும், நுட்பமாகவும் இருப்பதைக் காணமுடியும்.

 

இரண்டாவது படத்தில் மூன்று அம்புகளும் ஒரே இடத்தில் எய்யப்பட்டுள்ளன. ஆனால், அவை மையத்தில் இல்லை. இப்படத்தின் மூலம் இரண்டாவது நபர் நுட்பமாக இருக்கிறார்; ஆனால், துல்லியமாக இல்லை எனக் கூறலாம்.

 

மூன்றாவது நபர் துல்லியமாகவும் இல்லை; நுட்பமாகவும் இல்லை எனக் கூறலாம்.