Theory:

III. பூஞ்சை:
பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியாட் செல் அமைப்பைக் கொண்டவை. இவற்றின் உடலானது ஹைபாக்கள் எனும் பூஞ்சை இழைகளால் ஆனது. ஒன்றிற்கும் மேற்பட்ட பூஞ்சை இழைகள் இணைந்து மைசீலியம் எனப்படும் இழைப் பின்னலை உருவாக்குகின்றன.
 
shutterstock_1658506972 (fungal cell structure).png
பூஞ்சையின் அமைப்பு
 
ஈஸ்ட் போன்ற சில வகைப் பூஞ்சைகள் ஒரு செல்லால் ஆனவை. ஆனால் பெனிசிலியம் பல செல் உயிரிகள். பூஞ்சையின் செல் சுவரானது கைட்டின் என்ற வேதிப்பொருளால் ஆனது. பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது. எனவே, பிறசார்பு உணவூட்ட முறையைப் பின்பற்றுகின்றன.
 
Important!
தகவல்கள்:
  • மிகவும் அறியப்படும் தனிப்பூஞ்சை "சகரோமைசிஸ் சரவேசியே"
  • பூஞ்சைப் பற்றிய பாடப்பிரிவு "மைக்கலாஜி" ஆகும்.
ஈஸ்ட் செல்லின் அமைப்பு:
ஈஸ்ட் ஒரு செல் பூஞ்சை ஆகும். இவை முட்டைப் போன்ற வடிவம் கொண்டவை, மேலும் உட்கரு மற்றும் செல்சுவர் கொண்டுள்ளன. உட்கரு, சைட்டோபிளாசத்தில் அமைந்துள்ளது. செல் நுண்ணுறுப்புகள் காணப்படுகின்றன. இவை, உணவினை கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்த் துளிகளாக சேமித்து வைக்கின்றன.
 
PPT.png
ஈஸ்ட் செல்லின் அமைப்பு
 
ஈஸ்ட்டுகள், நொதித்தல் (fermentation) மூலம் காற்றில்லா முறையில் சுவாசிக்கின்றன. மேலும், மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. 
பூஞ்சையால் ஏற்படும் நோய்:
நோய்கள்
நுண்ணுயிரி
பரவும்
முறை
அறிகுறி
தடுப்பு
முறை
உருளை கிழங்கு
நோய்
பைடோபைதிரோ
இன்ஸ்பேஷ்டன்ஸ்
 
 காற்று
கிழங்குகளில் பழுப்பு
நிற புண்கள் 
பூஞ்சை
கொல்லி
IV. ஆல்கா:
ஆல்காக்கள் யூகேரியாடிக்  உயிரினங்கள். இவை தற்சாற்பு ஊட்டமுறையை உடையவை. ஆல்காகளில் பச்சையம் உண்டு, எனவே இவை ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.
 
    Important!
  • ஆல்காக்கள் \(1\)µm - \(50\)m வரை வளர்கின்றன.
  • ஆல்காக்கள் பற்றி அறியும் பாடப்பிரிவு "பைகாலாஜி (அ) ஆல்காலஜி" எனப்படும்.
  • "நீர் புற்கள்" என்றும் அழைக்கபடுகின்றன. 
பசுங்கணிகங்கள் (chloroplasts) ஆல்காக்களில் பலவகையான வடிவங்களில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கிளாமைடோமோனாஸில் கிண்ண வடிவமும், ஸ்பைரோகைராவில் ரிப்பன் வடிவமும், சைக்னீமாவில் நட்சத்திர வடிவமும் உடையன.
 
PPT (1).png
ஸ்பைரோகைரா  - ஆல்கா  
 
ஆல்காக்களில் மூன்று வகையான ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுகின்றன.
  • பச்சையம்
  • காரோட்டினாய்டுகள்
  • பிலிபுரதங்கள்
ஆல்காக்களில் சில ஒற்றை செல்லால் ஆனவை. சில கூட்டமைவை தோற்றுவிக்கின்றன மற்றும் ஸ்பைரோகைரா போன்றவை இழைகளால் ஆனவை. ஒரு செல் ஆல்காக்கள் கிளாமைடோமோனாஸ் போல நகரும் திறன் உள்ளதாகவோ அல்லது குளோரெல்லா போல நகரும் திறனற்றோ காணப்படும்.
 
PPT (1).jpg
 
குளோரெல்லா
 
நீரில் நீந்தும் நுண்ணிய ஆல்காக்கள் ஃபைட்டோ பிளாங்க்டான்கள் ஆகும். மேலும் மிகப் பெரிய உடலத்தை உடைய சில பிரிவினங்களும் காணப்படுகின்றன, எ. கா. காலெர்ப்பா, சர்காஸம், லாமினேரியா, ஃபியூகஸ்.
ஆல்காக்களின் சில சிற்றினங்களும், பூஞ்சைகளும் சேர்ந்து காணப்படும் தாவரப் பிரிவு லைக்கன்கள்  எனப்படுகின்றன. தொற்றுத்தாவரமாக வாழ்பவை எப்பிஃபைட்டுகள் என்று அழைக்கபடுகின்றன. லித்தோஃபைட்டுகள் பாறை வாழ் ஆல்காக்கள் ஆகும்.
ஆல்காக்களின் \(3\) முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவையாவன உடல் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பால் இனப்பெருக்கம் ஆகும்.
கிளாமைடோமோனாஸ் - செல் அமைப்பு
ஒரு செல்லாலான , கசையிழை மூலம் இடம்பெயரும் திறனுடைய நன்னீர் வாழ் பாசியாகும். இவை, பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. முட்டை, கோள (அ) பேரிக்காய் வடிவங்களுடன் காணப்படுகின்றன. இவற்றின், முன் பகுதி குறுகியும், பின் பகுதி அகன்றும் உள்ளது.
 
PPT (2).png
கிளாமைடோமோனாஸ் செல்லின் அமைப்பு
 
கிளாமைடோமோனாஸின் செல் சுவர் செல்லுலேசால் சூழப்பட்டுள்ளது. மேலும், இதில் சைட்டோபிளாசம், உட்கரு ஆகியவை காணப்படுகின்றன. இவை, இரு கசையிழைக் கொண்டுள்ளன. கிளாமைடோமோனாஸின் பசுங்கணிகங்கத்தின் முன்புறப் பகுதியில் சிறிய சிவப்பு நிற கண்புள்ளியைக் கொண்டுள்ளது. இவை, பால் மற்றும் பாலிலா இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன.