PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தாவரங்கள் பல்வேறு வழிகளில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில தாவரங்களின் அறிவியல் மற்றும் பொதுப் பெயருடன் பயன்பாடுகளையும் பின்வருமாறு காணலாம்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
800pxAcalyphaindicaKuppaimeni.jpg
குப்பைமேனி
  • இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
  • குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
  • குப்பைமேனியின் இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும்.
  • இந்த தாவர இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
800pxBael03FSParkAsit.jpg
வில்வம்
  • இது ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
  • தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி, செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.   
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
shutterstock723189193.jpg
தூதுவளை
  • இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது இருமல், சளி, காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.  
ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
shutterstock1766079587.jpg
கீழா நெல்லி
  • இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • இது கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அலோவெரா (சோற்றுக் கற்றாழை)
450pxAloeVeraकरफड.jpg
சோற்றுக் கற்றாழை
  • இந்த தாவரமானது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இந்த தாவரத்தின் இலைகள் தீக்காயங்கள், ஒவ்வாமை எதிர்வினைகள்,மூலநோய், முடக்கு வாதம், வாத காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்படும் அழற்சி போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
  • வயிற்றுப் புண்கள், நீரிழிவு நோய், மற்றும் செரிமான அழற்சி நிலைகளை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Acalypha_indica(Kuppaimeni).JPG
https://commons.wikimedia.org/wiki/File:Bael03_FSPark_Asit.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Aloe_Vera_(%E0%A4%95%E0%A5%8B%E0%A4%B0%E0%A4%AB%E0%A4%A1).jpg