Theory:

இவை ஒரு திறந்த விதைத் தாவரங்கள். ஜிம்னோஸ்பெர்ம்கள் வேர், தண்டு, இலை என வேறுபடுத்தப்பட்டுள்ளது.  இவற்றில் நன்கு வளர்ச்சியடைந்த சைலம், ஃபுளோயம் போன்ற கடத்தும் திசுக்கள் உள்ளன.
 
  • ட்ராக்கீடு: நீரைக் கடத்தக் கூடிய திசுவாகும்.
  • சல்லடை செல்: உணவுப் பொருள்களைக் கடத்தக்கூடிய திசுவாகும்.
இனப்பெருக்கம்
ஜிம்னோஸ்பெர்மின் வாழ்க்கைச் சுழற்சியில்  இரண்டு நிலைகள் காணப்படுகின்றன.
  • ஸ்போரோஃபைட்
  • கேமீட்டோஃபைட்
Design - YC IND.png
ஜிம்னோஸ்பெர்ம்களின் இனப்பெருக்கம்
 
தாவர உடலத்தில் ஸ்போரோஃபைட் ஓங்கு தன்மையுடையது.  சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை. ஜிம்னோஸ்பெர்ம்களில் ஸ்போர்கள் கூம்பு வடிவ வித்தகத்தினுள் உருவாகின்றன.
வகைப்பாடு
ஜிம்னோஸ்பெர்ம்கள் நான்கு வெவ்வேறு வகுப்புகளாக பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
  • சைக்கடேல்ஸ்
  • ஜிங்கோயேல்ஸ்
  • ஊசியிலை மரங்கள்
  • நீட்டல்ஸ்
1. சைக்கடேல்ஸ்:
  
இவை பனை போன்ற தாவரங்கள். அவை நேராக  நிமிர்ந்து கிளைகள் இல்லாமல் இருக்கும். அவை பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களில் காணப்படுகின்றன.
 
cycadalesw3250.jpg
சைக்கஸ்
 
வேர்:ஆணிவேர் மற்றும் பவளவேர் என இருவகை வேர்களைக் கொண்டுள்ளது. எ.கா.சைக்கஸ்
 
 2. ஜிங்கோயேல்ஸ்:
  
இந்த தாவரங்கள் விசிறி வடிவ இலைகளை உடையவை. இவை விரும்பத்தகாத துர்நாற்றத்தை உருவாக்குகின்றன. எ.கா:ஜின்கோ பிலோபா
 
450pxGinkgobiloba001.jpg
ஜின்கோ பிலோபா
 
3. கோனிஃபெரேல்ஸ் (ஊசியிலை மரங்கள்): 
 
இவை ஜிம்னோஸ்பெர்ம்களின் மிகவும் பொதுவாக அறியப்பட்ட  கூம்பு வடிவ பசுமை மாறாத் தாவரங்கள். அவற்றின் இலைகள் ஊசி போன்ற அல்லது செதில் போன்றவை. இந்த தாவரங்களின் விதைகள் பெண் கூம்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எ.கா.பைனஸ்
 
800pxPinuspineamalecones.jpg
பைனஸ்
 
4. நீட்டல்ஸ்:
 
இவை ஆஞ்சியோஸ்பெர்ம்கள் போன்ற மேம்பட்ட தன்மைகளைக் கொண்ட தாவரங்களின் ஒரு சிறிய குழுவாகும். அவை பொதுவாக மென்மையான பூச்சு கொண்ட மலர்ந்த இலைகளால் வகைப்படுத்தப்படுகின்றன. இவை மூடப்படாத சூல்களைக் கொண்டுள்ளன. எ.கா.நீட்டம்.
 
6241001749f88c9a3c49o.jpg
நீட்டம்
பொருளாதார முக்கியத்துவம்
1. உணவு:
 
இந்த தாவரங்கள் உணவுப் பொருட்களின் நல்ல ஆதாரங்கள். பைனஸ் ஜெரார்டியானாவின் விதைகள் உண்ணக்கூடியவை. சில ஜிம்னோஸ்பெர்ம் இனங்கள் மாவுச்சத்துக்கான நல்ல மூலமாகும்.
 
 2. மரம் மற்றும் காகிதம்:
  
ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது  கட்டுமானம், பேக்கிங் மற்றும் ப்ளைவுட் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்  காகிதத் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்கும் பயன்படுகிறது.
Example:
செட்ரஸ், அகதிஸ்
3. வர்ணங்கள்:
 
பைனஸின் பிசின் டெர்பெண்டைன் என்ற அத்தியாவசிய எண்ணெயைப் பிரித்தெடுப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
 
4. மருத்துவ பயன்கள்:

வலி, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற டர்பெண்டைன் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது .
 
எபிட்ராவில் இருந்து எடுக்கப்படும் ஆல்கலாய்டு எபெட்ரின் என அழைக்கப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகிறது.
 
5.  அழகுத் தாவரம்: அராவ்கேரியா பிட்வில்லீ
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Big_Cycas.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Encephalartos_ferox_03.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Ginkgo_biloba_001.JPG
https://commons.wikimedia.orgwiki/File:Pinus_pinea_male_cones.jpg
https://www.flickr.com/photos/adaduitokla/6241001749