PDF chapter test TRY NOW

பாசிகள்  அல்லது  ஆல்கா என்பது பச்சையம் கொண்ட எளிமையான ஆரம்ப நிலைத் தற்சார்பு ஊட்டத் தாவரங்கள் ஆகும். இதில் \(12\) துறைகள் மற்றும் \(40\) ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

இதன் உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது, ஆல்காவின் உடல் தாவர உறுப்புகளாக (தண்டு, இலை, வேர்) வேறுபடுவதில்லை.  இது தாலோஃபைட்  பிரிவைச் சார்ந்தது.
 
PPT.jpg
ஆல்காவின்  தாலஸ் உடலம்

ஆல்கா முக்கியமாக தண்ணீரில் வாழ்கிறது. நன்னீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம். ஒருசில பாசிகள் ஈரமான நிலப்பகுதிகளிலும், சில பாசிகள் நீரின்மேற்பரப்புகளிலும் காணப்படுகின்றன.
ஆல்காக்கள்  தாவர மிதவை நுண்ணியிரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Important!
ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறை ஆல்காலஜி அல்லது ஃபைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது.
லைக்கன்கள்:
 
சில ஆல்காக்கள் உயர் தாவரங்களுடன் இணக்க உயிரிகளாகக் (mutualism) காணப்படுகின்றன. ஆல்காக்களின் சில சிற்றினங்களும் பூஞ்சைகளும் சேர்ந்து காணப்படும் தாவரப் பிரிவு லைக்கன்கள் (lichens) எனப்படுகின்றன.
வகைகள்
 வகுப்பு
நிறமியின் வகை
(ம)
சேமிப்பு உணவு
1. நீலப்பசும் பாசிகள் (சையனோஃபைசி)
 
bluegreenalgaew3051.jpg
எ. கா. ஆசிலட்டோரியா
ஃபைகோசயனின்
(ம)
சயனோஃபைசியன்
  
2. பச்சை பாசிகள் (குளோரோஃபைசி)
 
greenalgaew2110.jpg
எ. கா. கிளமிடோமோனாஸ்
பச்சையம்
(ம)
ஸ்டார்ச்
  
3. பழுப்பு பாசிகள் (பேயோஃபைசி)
 
brownalgaew3264.jpg
எ. கா. லேமினேரியா
ஃபியூக்கோசாந்தின்
(ம)
லேமினேரியன் ஸ்டார்ச் மற்றும் மானிடால்
  
4. சிவப்பு பாசிகள் (ரோடோஃபைசி)
 
redalgaew2747.jpg
எ. கா. பாலிஸைஃபோனியா
ஃபைக்கோஎரித்திரின்
(ம) 
ஃபுளோரிடியன் ஸ்டார்ச்
இனப்பெருக்கம்
பாசிகள் மூன்று வகைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவை பின்வருமாறு,
 
1. துண்டாதல் - உடலப் பெருக்கம்  எ.கா. ஸ்பைரோகிரா
 
PPT (11).png
ஸ்பைரோகிராவின் துண்டாதல் முறை

2. ஸ்போர் உருவாதல் - பாலிலா இனப்பெருக்கம். எ.கா.கிளாமிடோமோனாஸ்
 
chla.jpg
கிளாமிடோமோனாஸின் ஸ்போர் உருவாதல் முறை

3. பாலின செல்கள் இணைதல்  - பாலின இனப்பெருக்கம். எ.கா.ஸ்பைரோகிரா
 
PPT (12).png
ஸ்பைரோகிராவின் பாலின செல்கள் இணைதல் முறை
பொருளாதார முக்கியத்துவம்
1. மனிதன், வீட்டு விலங்குகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றிற்கு முக்கிய உணவாக ஆல்காக்கள் அமைகின்றன.
Example:
அல்வா, ஸ்பைருலினா, லேமினேரியா, அஸ்கோஃபில்லம்
2. நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துதல்நீலப்பசும் பாசிகள் வளி மண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்வளத்தை அதிகரிக்கின்றன.
Example:
நாஸ்டாக், அனபீனா
3. விண்வெளிப் பயணங்களின் போது CO, மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற
உபயோகப்படுத்தப்படுகிறது.
Example:
குளோரெல்லா பைரினாய்டோசா
4. பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
Example:
லேமினேரியா
5.தனிச் செல்புரதம் (SCP)ஒரு செல் ஆல்காக்கள் புரதம் செறிந்து காணப்படுவதால் இவை புரத உணவாகப் பயன்படுகின்றன.
Example:
குளோரெல்லா, ஸ்பைருலினா
6. சில வகையான சிவப்புப் பாசிகளிலிருந்துஅகார் அகார் எடுக்கப்படுகிறது. இது ஆய்வகங்களிலுள்ள வளர்ப்பு ஊடகங்களில் பயன்படுகிறது.
Example:
ஜெலீடியம், கிரேசிலேரியா
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/f/fc/Oscillatoria_filaments.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/e/ec/Nostoc_commune_kp.jpeg
https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5b/CharaV2.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d3/201410_chlamydomonas.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/8/85/The_freshwater_alga_Spirogyra.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/3/39/Sargassum_muticum_Yendo_Fensholt_1955_Lamiot_WimmereuxHautsDeFrance_Estran_Juillet_2016a4.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f8/Laminaria_saccharina_IMG_1029_listafyr.JPG
https://upload.wikimedia.org/wikipedia/commons/e/eb/Gelidium_sp.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/1/13/Polysiphonia-elongata-19880602a.jpghttps://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/Spirogyra_conjugation.jpg/1024px-Spirogyra_conjugation.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Vaucheria_sp_thallus_05.JPG/512px-Vaucheria_sp_thallus_05.JPG