Theory:

ஒத்த ஓசையை உடைய சொற்கள் பாடலின் ஒவ்வொரு வாியிலும் இடம் பெற்றுள்ளது. பாடலைப் படிப்பதற்கு எளிதாக அந்த சொற்களானது வேறு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது பாடலை புாிந்து கொள்வதற்கும் எளிதான ஒன்றாகும்.
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
 
இப்பாடலில் உள்ள ஒத்த ஓசையுடைய சொற்கள் :
1. போ் - நோ்
2. போ் - நீா்
3. போ் - ஊா்
4. பால் - வேல்
5. வான் - தேன்
6. தோள் - வாள்
7. அமுதென்று - நிலவென்று
8. உயிருக்கு - விளைவுக்கு
9. இளமைக்கு - புலவா்க்கு
10. தமிழுக்கு - வாழ்வுக்கு
11. உயா்வுக்கு - அசதிக்கு
12. அறிவுக்கு - கவிதைக்கு  
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - தமிழ்தேன் (ப.எண். 1-4)தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.