Theory:
வழி அலகுகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை அலகுகளின் கணித கலவையின் மூலம் பெறப்படும் அலகுகளாகும்.
மற்ற அனைத்து \(SI\) அலகுகளும் பல்வேறு சேர்க்கைகளில் அடிப்படை அலகுகளை பெருக்குதல், வகுத்தல் அல்லது பன்மடங்கு மதிப்பின் மூலம் பெறப்படுகின்றன.
உதாரணத்திற்கு,
- ஒரு பகுதியின் பரப்பளவை கணக்கிட நீளம் அகலத்தால் பெருக்கப்படுகிறது. அதன் அலகு \(m^2\) ஆகும்.
- இயந்திர ஆற்றலை கணக்கிட செலுத்தப்பட்ட விசையுடன் நகர்த்தப்படும் தூரம் பெருக்கப்படுகிறது. அதன் அலகு நியூட்டன் மீட்டர் ஆகும்.
- இது \(Nm\) அல்லது \(J\) என குறிக்கப்படும். திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியை நேரத்தால் வகுக்கத்து கணக்கிடப்படும். இதன் அலகு வினாடிக்கு ஒரு மீட்டர் என்பதாகும். இது \(ms^{−1}\) என குறிக்கப்படும்.
எண் | இயற்பியல் அளவு | வாய்ப்பாடு | அலகு |
1 | பரப்பு | நீளம் × அகலம் | மீ\(^2\) \((m^2)\) |
2 | பருமன் | நீளம் × அகலம் × உயரம் | மீ\(^3\) \((m^3)\) |
3 | அடர்த்தி | நிறை / பருமன் | கி.கி/மீ\(^3\) \((kg / m^3)\) |
4 | திசைவேகம் | இடப்பெயர்ச்சி/காலம் | மீ/வி \((m/s)\) |
5 | உந்தம் | நிறை × திசைவேகம் | கி.கிமீ/வி \((kgms^-1)\) |
6 | முடுக்கம் | திசைவேகம் /காலம் | மீ/வி\(^2\) \((m/s^2)\) |
7 | விசை | நிறை × முடுக்கம் | கி .கிமீ/ வி\(^2\) \((kgms^-2)\) அல்லது நியூட்டன் \((N)\) |
8 | அழுத்தம் | விசை / பரப்பளவு | நியூட்டன் / மீ\(^2\) \((N/m^2)\) அல்லது பாஸ்கல் \((Pa)\) |
9 | ஆற்றல் (வேலை) | விசை × தொலைவு | நியூட்டன் × மீ \((Nm)\) அல்லது ஜுல் \((J)\) |
10 | பரப்பு இழுவிசை | விசை / நீளம் | நியூட்டன் / மீ \((N/m)\) |