PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாஸ்கல் விதியின் விளைவே ஆர்க்கிமிடிஸின் தத்துவமாகும்.
 
வரலாற்றுக் குறிப்புகளின் படி, குளியல் தொட்டியில் அமர்ந்திருக்கும் போது தனது எடையில் ஏற்பட்ட வெளிப்படையான இழப்பைக் கவனித்தபிறகு ‘நீர்நிலைசமநிலையின்’ (hydrostatic balance) தத்துவத்தை ஆர்க்கிமிடிஸ் உருவாக்கினார். அவர் இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்தவுடன் ‘யுரேகா (Eureka)’ என்று அலறிக்கொண்டே குளியல் தொட்டியிலிருந்து வெளியே ஓடினார் என்று கூறப்படுகிறது.
 
13.png
ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும் போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும்” என்று ஆர்க்கிமிடிஸ் தத்துவம் கூறுகிறது.
6.png
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
 
ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஓய்வுநிலையில் உள்ள பாய்மத்தில் மூழ்கும் போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான மேல்நோக்கு விசையை உணரும். இந்த மேல்நோக்கு விசையினால் பொருள் தன் எடையின் ஒரு பகுதியை இழக்கிறது. எடையில் ஏற்பட்ட இந்த இழப்பு மேல்நோக்கு விசைக்குச் சமமாக உள்ளது.
  
எனவே, பொருளொன்று முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாய்மங்களில் மூழ்கும் போது,
 
மேல் நோக்கு விசை =இடப்பெயர்ச்சி செய்யப்பட்டபாய்மத்தின் எடை=பொருளின் தோற்ற எடைஇழப்புபொருளின் தோற்ற எடை இழப்பு= காற்றில் பொருளின் எடை மேல் நோக்கு விசை
 
11.png
மேல்நோக்கு விசை இடம்பெயர்ந்த திரவத்தின் எடைக்கு சமம்
 
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் நிஜ வாழ்க்கையில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதில் பயன்படுத்தப்படுகிறது. திரவமானி மற்றும் பால்மானி ஆகியவை ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது