PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
iv. குறுயிழை எபிதீலியம்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_11.png
குறுயிழை எபிதீலியம்
  
அமைப்பு
  • நீண்ட செல்கள் மற்றும் மென்மையான ரோம வெளிநீட்சிகள் பெற்றுள்ளன.
இருப்பிடம்
  • சுவாசக்குழாய், சுவாசப் பாதையின் நுண்குழல்கள், சிறுநீரகக் குழல்கள் மற்றும் அண்டக்குழல்களில் காணப்படுகிறது.
பணி
  • துகள்களை அல்லது கோழைகளை ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்த்துவது.
v. சுரக்கும் எபிதீலியம்
YCIND03062022_3831_Organisation_of_tissues_TM_9th_1.png
சுரக்கும் எபிதீலியம்
 
அமைப்பு
  • எபிதீலிய செல்கள் மாற்றமடைந்து சிறப்பான சுரக்கும் செல்களாக உருவாகின்றன.
இருப்பிடம்
  • இரைப்பைச் சுரப்பிகள், கணையக் குழாய்கள் மற்றும் குடல் சுரப்பிகள் மீது பூச்சாக உள்ளன.
பணி
  • எபிதீலியத்தின் புறப்பரப்பில் சில வேதிப் பொருட்களைச் சுரக்கின்றன.
2. கூட்டு எபிதீலியம்
YCIND03062022_3830_Organisation_of_tissues_TM_9th_9_1.png
கூட்டு எபிதீலியத்தின் வகைகள்
  
அமைப்பு
  • ஒன்றுக்கு மேற்பட்ட செல் அடுக்குகளைப் பெற்று, பல அடுக்காக தோன்றமளிக்கும். (பல்லடுக்கு எபிதீலிய செல்கள்)
பணி
  • பல அடுக்குகள் இருப்பதால் குறைந்த அளவே சுரத்தல் மற்றும் உறிஞ்சுதலில் ஈடுபடுகிறது. இயந்திர மற்றும் இரசாயண அழுத்தங்களிலிருந்து அடித்தளத் திசுக்களுக்கு பாதுகாப்பு தருகிறது.
இருப்பிடம்
  • தோலின் உலர்ந்த பகுதி, வாய்க்குழி மற்றும் தொண்டையின் ஈரமான புறப்பகுதியைச் சுற்றி உள்ளன.