PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google Playஒரு தாவரம் தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் நிகழ்வே ஒளிச்சேர்க்கை எனப்படும்.
ஒளிச்சேர்க்கை ஆங்கிலத்தில் photosynthesis எனப்படும். இதன் விளக்கமானது ஒளியின் உதவியால் உருவாக்கபடுதல் என்பதாகும். இதன் செயல்பாடு பின்வருமாறு,

ஒளிச்சேர்க்கையின் செயல்பாடு
அதாவது ஒளிச்சேர்க்கையில் ஒளி ஆற்றலானது வேதி ஆற்றலாக மாற்றப்படும்.
தற்சார்பு ஊட்டம் உடைய பசும் தாவரங்கள் தத்தம் உணவை தாமே தயாரித்துக்கொள்ளும் நிகழ்வு ஒளிச்சேர்க்கை ஆகும்.

ஒளிச்சேர்க்கையில் கார்பன்-டை-ஆக்ஸைட் மற்றும் நீரானது சூரிய ஒளியும், பச்சையமும் சேர்ந்து முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றம் அடையும். மேலும், மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரமான ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றம் செய்கிறது. அதாவது ஒளிச்சேர்க்கையில் தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை உள்ளே இழுத்து ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றம் செய்கிறது.
இதன் ஒட்டுமொத்த சமன்பாடு பின்வருமாறு:
கார்பன் டைஆக்ஸைடு + நீர் \(\rightarrow\) குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்
ஒளிச்சேர்க்கை நடக்க தேவையானவை:
- பச்சையம் என்னும் நிறமி ஒளிச்சேர்க்கைக்கு மிக முக்கிய தேவை ஆகும். இது தாவரம் தன் உணவை தானே தயாரிக்க உதவுகிறது.
- கார்பன் டைஆக்ஸைட்டினை, தாவரங்கள் சுற்றுப்புரத்தில் இருந்து எடுத்துக்கொள்கின்றன.
- நீர், வேரின் மூலம் உறிஞ்சப்படுகிறது.
- சூரிய ஒளி ஆகும்.
Important!
உங்களுக்கு தெரியுமா!
ஒரு சில வகையான பூச்சி இனங்களும், சூரிய ஒளியை ஈர்க்கும் திறன் கொண்டவை. அவற்றில், முக்கியமானது வெஸ்பா ஒரியான்டாலிஸ் (Vespa orientalis) எந்த எரும்பு ஆகும். இதனை, டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்பூச்சியின் வயிற்று பகுதியால் மஞ்சள் திட்டுகள் மற்றும் \(30\) அடுக்குகளைக் கொண்ட மேல் தோல் அமைப்பு உள்ளது. ஆனால், மேல் தோலில், பச்சையத்திற்கு பதிலாக, சாந்தோப்டெரின் (Xanthopterin) என்ற மஞ்சள் நிற ஒளி உணர் நிறமி உள்ளது. இவை, ஒளி அறுவடை மூலக்கூறுக்களாக உள்ளன.

வெஸ்பா ஒரியான்டாலிஸ்