PUMPA - THE SMART LEARNING APP

AI system creates personalised training plan based on your mistakes

Download now on Google Play
 \(1885\) ஆம் ஆண்டு அக்டோபர்  \(7\) நாள் அன்று நீல்ஸ்போர் டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகனில் பிறந்தார். அவர் ஒரு சிறந்த கால்பந்து வீரர் மற்றும் மான் செஸ்டர் பல்கலைகழகத்தில் ரூதர்ஃபோர்டுடன் பணிபுரிந்தார். மேலும் \(1922\) இல் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றார்.
ரூதர்ஃபோர்டின் அணு மாதிரி அணுவின் நிலைப்புத் தன்மையை விளக்க முடியாமல் போனதால் அணு பற்றிய ஒரு புதிய மாதிரி தேவைப்பட்டது. நீல்ஸ் போர் ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உண்டாக்கினார். அணுவின் நிலைப்புத்  தன்மையை உறுதிபடுத்துவதற்காக ரூதர்ஃபோர்டின் அணுமாதிரியில் சில திருத்தங்கள் செய்து, நீல்ஸ் போர் புதிய அணு மாதிரி கொள்கையை வெளியிட்டார்.
 
 YCIND20220728_4116_Atomic Structure_14.png
நீல்ஸ் போர் அணு மாதிரி
 
நீல்ஸ்போரின் முக்கியக் கோட்பாடுகள்:
  • ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவ்வட்டப் பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது கூடுதல் அல்லது ஆற்றல் மட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வரும்பொழுது ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
  • வட்டப் பாதைகள் \(1,2,3,4\) அல்லது \(K,L,M,N\) எனப் பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் முதன்மைக் குவாண்டம் எண்கள் (n) ஆகும்.
  • உட்கருவிற்கு அருகில் இருக்கும் கூடு \(K\) கூடு (n=1) இது குறைந்த ஆற்றலை உடையது. \(L, M, N)……. ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும். உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது, ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
  • ஒவ்வொரு ஆர்பிட் அல்லது கூடும் நிலையான அளவு ஆற்றலைப் பெற்றுள்ளது.
  • உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்களின் அளவும் அதிகரிக்கிறது.
  • ஒரு ஆற்றல் மட்டத்தில் இடம்பெறும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை \(2n^2\) ஆகும். இங்கு \(n\) என்பது அந்த ஆர்பிட்டின் முதன்மை குவாண்டம்எண் ஆகும்.
  • எலக்ட்ரான், ஆற்றலை எடுத்துக்கொள்ளும் போது, குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
  • உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலக்ட்ரான் இடம் பெயரும்போது ஆற்றலை வெளியிடுகிறது.
YCIND20220728_4116_Atomic Structure_151.png
 
உங்களுக்கு தெரியுமா ஒரு அணு எவ்வளவு பெரியது? அல்லது மிகச் சிறியது என்று. ஒரு சராசரி அணு \(0.000,000,001\) மீட்டர் அளவுடையது. ஒரு மில்லி மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு ஆகும். ஒரு பலூனை ஊதினால் அது உள்ளே எதுவும் இல்லாதது போலவும் எடையற்றது போலவும் தோன்றும் ஆனால் அதில் ஏறத்தாழ காற்றிலுள்ள வாயுக்களை உருவாக்கும் \(100\) பில்லியன் பில்லியன் அணுக்கள் உள்ளது.
 
போர் மாதிரியின் குறைபாடுகள்:
  
போரின் மாதிரிக்கு எதிராக பல வாதங்கள் எழுப்பப்படுகின்றது. இவருடைய மாதிரியின் முக்கியக் குறைபாடு, இந்த மாதிரி ஹைட்ரஜன்  அணுவிற்கு மட்டுமே பொருந்துவதாகும். இந்த மாதிரி, பல எலக்ட்ரான்களை உடைய அணுக்களுக்கு விரிவானா விளக்கம் அளிக்கவில்லை. எனவே அணுவைப்பற்றி படிக்க மேலும் பல விரிவான ஆய்வுகள் தேவைப்பட்டன. இதைப் பற்றிய விரிவான விளக்கம் உயர் வகுப்புகளில் கொடுக்கப்படும்.
 
ஆர்பிட் அல்லது கூடு:
ஆர்பிட் என்பது எலக்ட்ரான்கள் சுற்றிவரும் சுற்று வட்டப்பாதை எனப்படுகிறது.
விளக்கம்:-
முதல் ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (K) (n=1); \(2\) x \(1^2\) = \(2\)
இரண்டாவது ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (L) (n=2); \(2\) x \(2^2\) = \(8\).