PDF chapter test TRY NOW

YCIND20220804_4089_Plant anatomy and physiology_09.png
ஒரு விதையிலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
 
மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், ஒரு விதையிலைத் தாவர இலையின் உதாரணமாக, புல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.
 
ஒரு வித்திலைத் தாவர இலையின் உள்ளமைப்பில் இருக்கும் திசுக்கள் குறித்து இக்கோட்பாட்டில் காண்போம்.
 
i. புறத்தோல்:
 
புறத்தோலில் வெளிப்புற மேல்புறத் தோல் இலையின் மேல் பக்கத்திலும், கீழ் புறத்தோல் இலையின் கீழ் பக்கத்திலும் உள்ளது. மேல்புறத்தோல் மற்றும் கீழ்ப் புறத்தோலின் வெளிப்புற பகுதியில் கியூட்டிக்கிள் என்ற படலம் காணப்படுகின்றது அது மட்டுமல்லாமல் மேல் மற்றும் கீழ் புறத்தோல் அடுக்குகளில் புறத்தோல் துளைகளும் (ஸ்டோமாட்டா) காணப் படுகின்றன. மேற்புறத் தோலில் உள்ள சில செல்கள் பெரியதாகவும், மெல்லிய சுவர் கொண்டதாகவும் இருக்கும். அவை புல்லிபார்ம் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
ii. இலையிடைத் திசு:
 
இலையிடைத் திசுஎன்பது மேல்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத் தோலுக்கும் இடையில் காணப்படும் தளத்திசுவாகும். இவை மீசோபில் என்றும் அழைக்கப் படும். இரு வித்திலை போன்று ஒரு வித்திலையில் பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என்று எந்த விதமான வேறுபாடும் காணப்படுவதில்லை. மேலும் இவற்றில் செல்கள் இடைவெளிகளுடன், ஒழுங்கற்ற வடிவில் பசுங்கணிகங்களுடன் அமைந்துள்ளன.
 
iii. வாஸ்குலார் கற்றைகள்:
 
ஒரு விதையிலையில் ஏராளமான வாஸ்குலார் கற்றைகள் உள்ளன. அவை அளவில் சிறியவை மற்றும் பெரியவையாகவும் இருக்கும். பாரன்கைமா செல்களாலான கற்றை உறை வாஸ்குலார் கற்றையைச் சுற்றிக்  காணப்படுகின்றது.  ஒரு விதையிலை தாவர இலையில்  வாஸ்குலார் கற்றை, ஒருங்கமைந்தவை, ஒன்றிணைந்தவை,  மற்றும் மூடியவையாக உள்ளன. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையும் சைலம் மற்றும் புளோயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவ்வகை வாஸ்குலார் கற்றையில் மேல்ப்புற தோலை நோக்கி சைலமும் , கீழ்ப்புற தோலை நோக்கி புளோயமும் உள்ளது.