PDF chapter test TRY NOW

நாம் முந்தைய கோட்பாட்டில் பயின்ற படி ஒளிச்சேர்க்கையின் அனைத்து நிகழ்வுகளும் பசுங்கணிகத்தில் தான் நடைபெறும்.  இவை, இரண்டு முக்கிய பகுதிகளாக நிகழ்கின்றது. அவையாவன;
  1. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை - இவ்வினை பசுங்கணிகத்திலுள்ள கிரானா பகுதியில் நிகழ்கிறது.
  2. ஒளி சாரா வினை அல்லது இருள் வினை - இவ்வினை பசுங்கணிகத்திலுள்ள ஸ்ட்ரோமா பகுதியில் நிகழ்கிறது.
YCIND20220804_4089_Plant anatomy and physiology_11.png
ஹில்வினை மற்றும் கால்வின் சுழற்சி
 
ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை:
 
ஒளி சார்ந்த வினை \(1939\) ஆம் ஆண்டில் ராபின் ஹில் என்பவரால் கண்டுபிடிக்க பட்டது. இவ்வினை பசுங்கணிகங்களிலுள்ள தைலகாய்டு சவ்வுகளில் சூரிய ஒளியின் முன்னிலையில் நிகழ்கின்றன.  இது ஒளியை சார்ந்து நடைபெறும் வினை என்று இந்த வினையின் பெயரிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வினையில் ஒளியாற்றல் பிற ஆற்றல் வடிவங்களுக்கு மாற்றப்படும். அதாவது,  ஒளி சார்ந்த வினைகளில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும்  நிறமிகள் ஒளி ஆற்றலை உறிஞ்சி அதை வேதியியல் ஆற்றலான \(ATP\) மற்றும் \(NADPH_2\) வாக மாற்றுகின்றது. இவ்வினையில் உருவாக்க பட்ட ஆற்றல் இரண்டாம் பகுதியான இருள் வினைக்கு பயன்படுகின்றன.
 
ஒளி சாரா வினை அல்லது இருள் வினை:
 
இருள் வினையில்கார்பன் டை ஆக்ஸைடு வாயு ஒளி வினையின் போது உருவாக்கப்பட்ட \(ATP\) மற்றும் \(NADPH_2\) வின் உதவியால் கார்போஹைட்ரேட் என்னும் உயிர் மூலக்கூறாக ஒடுக்கம் அடைகிறது. இவ்வினை பசுங்கணிகங்களிலுள்ள ஸ்ட்ரோமாவில் நிகழும், மேலும் இந்நிகழ்விற்கு ஒளி வினை போன்று சூரிய ஒளி தேவைப்படுவதில்லை. எனவே இவ்வினை இருள் வினை என்று அழைக்க படுகிறது. காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடும், ஒளி சார்ந்த வினையின் போது உருவாக்க பட்ட \(ATP\) மற்றும் \(NADPH_2\) ஒளி சாரா வினையில் உள் நுழைகிறது. மெல்வின் கால்வின் என்பவர் கண்டுபிடித்ததால், இது கால்வின் சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.
மெல்வின் கால்வின் ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஆவார். அவர் ஒளிச்சேர்க்கை நிகழ்வில் வரும் இரண்டாம் பகுதியான இருள் வினையை கண்டுபிடித்தார். அதாவது இவர் ஒளிச்சேர்க்கையின்  வேதியியல் நிகழ்வுகளை  கண்டு பிடித்தார். எனவே, கால்வின் என்ற அவரது பெயரால் இந்த வினைக்கு கால்வின் சுழற்சி பெயரிடப்பட்டது. அவரது கண்டுபிடிப்புக்காக, \(1961\) ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
வேதியியல் ஆற்றலின் விரிவாக்கங்கள்:
  • \(ATP\) - அடினோசைன் ட்ரை பாஸ்பேட்
  • \(ADP\) - அடினோசைன் டை பாஸ்பேட்
  • \(NAD\) - நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு
  • \(NADP\) - நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு பாஸ்பேட்
ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் காரணிகள்:
 
உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளால் ஒளிசேர்க்கை பாதிக்க படுகிறது.
 
அ. உட்புறக் காரணிகள்:
  • நிறமிகள்
  • இலையின் வயது
  • கார்போஹைட்ரேட்டின் செறிவு
  • ஹார்மோன்கள்
ஆ. வெளிக் காரணிகள்:
  • சூரிய ஒளி
  • கார்பன் டை ஆக்ஸைடு
  • வெப்பநிலை
  • நீர்
  • கனிமங்கள்
தகவல் துளிகள்:
  • ஒரு செல் தனக்கு தேவையான ஆற்றலை நேரடியாக குளுக்கோஸ் மூலக்கூறிலிருந்து பெற்று கொள்ள இயலாது. மாறாக, சுவாசிக்கும் பொழுது குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து வெளியேற்ற படும் ஆற்றல் \(ATP\) யில் சேமிக்க படும். இதிலிருந்து தான் ஒரு செல் தனக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்கின்றது.
  • செயற்கை ஒளி சேர்க்கை நிகழ்ச்சி, சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தை பயன் படுத்தி பாரத ரத்னா C.N.R. ராவ் என்பவர் ஹைட்ரஜன் எரி பொருளை செயற்கை ஒளி சேர்க்கை மூலம் தயாரித்தார். இவ்வாறு உற்பத்தி செய்யபட்ட ஆற்றலுக்கு புதுப்பிக்கும் ஆற்றல் என்று பெயர்.
  • சூரிய ஒளி, மழை, காற்று, புவி வெப்பம், கடல் அலை போன்ற புதுப்பிக்கத் தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) என்று  பெயர்.