PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முந்தைய பகுதியில், நிலைமம் மற்றும் அதன் வகைகளைப் பற்றி படித்தோம்.
 
இந்த பகுதியில், நியூட்டனின் முதல் இயக்க விதி மற்றும் விசையின் அடிப்படைகள் பற்றி பார்ப்போம்.
 
ஐசக் நியூட்டன் (\(17\) ஆம் நூற்றாண்டின் அறிவியல் அறிஞர்) பல்வேறு விதிகளை முன்வைத்தார், அவை விசை ஏன் பொருட்களை நகர்த்துகின்றன (அல்லது நகரவில்லை) என்பதை விவரிக்கின்றன. இந்த விதிகள் நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் என்று அறியப்படுகின்றன.
 
நியூட்டனின் முதல் இயக்க விதி சில சமயங்களில் நிலைம விதி என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
நியூட்டனின் முதல் விதி:
எந்தவொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
இவ்விதி விசையினை வரையறுக்கிறது. அது மட்டுமின்றி, பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.
 
விசை:
விசை என்பது ‘இழுத்தல்’ அல்லது ‘தள்ளுதல்’வடிவத்தில் வெளிப்படும் ஒரு புறச்செயல் ஆகும். இதை கீழ்கண்டவாறு விளக்கலாம்.
  • இது ஒரு நிலையான பொருளின் இயக்கத்தை உருவாக்குகிறது அல்லது தொடங்க முயற்சிக்கிறது.
  • இது நகரும் பொருளை நிறுத்துகிறது அல்லது நிறுத்த முயற்சிக்கிறது.
  • இது நகரும் பொருளின் இயக்கத்தின் திசையை மாற்றுகிறது அல்லது மாற்ற முயற்சிக்கிறது.
விசைக்கு எண்மதிப்பு மற்றும் திசை இரண்டும் உண்டு. எனவே, இது ஒரு வெக்டார் அளவாகும்.
 
விசையின் வகைகள்:
 
விசை செயல்படும் திசையைப் பொறுத்து, அவற்றை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம்:
  • ஒத்த இணைவிசைகள்
  • மாறுபட்ட இணைவிசைகள்
ஒத்த இணைவிசைகள்:
ஒரு பொருள் மீது ஒரே திசையில் செயல்படும் சமமான அல்லது சமமற்ற அளவு கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விசைகள், ஒத்த இணைவிசைகள் எனப்படும்.
 
11.png
ஒத்த இணைவிசைகள்
 
மாறுபட்ட இணைவிசைகள்:
ஒரு பொருள் மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமமான அல்லது சமச்சீரற்ற விசைகள் ஒன்றுக்கொன்று இணையாக எதிரெதிர் திசையில் செயல்பட்டால், அவை மாறுபட்ட இணைவிசைகள் எனப்படும்.
 
12.png
மாறுபட்ட இணைவிசைகள்