PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநம் வீடுகளில் வழவழப்பான ஓடுகள் பதித்த சுவர்களில், ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் உறிஞ்சும் கோப்பை கொக்கிகள் (Vacuum suction hooks), எவ்வாறு பிடிமானமற்ற சுவற்றில் பசை ஏதும் இன்றி ஒட்டிக்கொள்கின்றன என்பதை கவனித்துப்பாருங்கள்.
உறிஞ்சும் கோப்பை கொக்கிகள்
அட்டைகள் தாம் இரத்தம் உறிஞ்ச விரும்பும் விருந்தோம்பியின் (Host) உடலில் இவ்வாறே உறுதியாக ஒட்டிக்கொள்கின்றன.
உணவு:
அட்டை, கால்நடைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளின் இரத்தத்தை உணவாகப் பெறுகிறது. உணவை அடையாளம் காண \(2\) முதல் \(10\) கண்கள் உதவுகின்றன. இரத்த உறிஞ்சிகளான அட்டைகள் தம் எடையைப் போல ஐந்து மடங்கு அதிக இரத்தம் உறிஞ்சும் திறன் கொண்டவை. இவ்வாறு முழுவதும் உண்டு விட்டால் அந்த உணவை செரித்து உறிஞ்சிக்கொள்ள ஓராண்டுக்கு மேல் ஆகும்.
அட்டைகள் கடிக்கும் பொழுது விருந்தோம்பியின் உடலில் ஒருவித மயக்கப்பொருளைச் செலுத்துகின்றன. எனவே, இவை கடிப்பதை விருந்தோம்பிகளால் உணர முடிவது இல்லை.
அட்டைகளின் உணவு மற்றும் சீரண மண்டலங்களைப் பற்றி அறிந்துக் கொள்வது அட்டைகளின் உணவூட்டம் மற்றும் சீரண முறைகளைப் பற்றி அறிந்துக் கொள்ள உதவும்.
அட்டையின் சீரண மண்டலம்
1. உணவுக்குழல்:
அட்டையின் உணவுமண்டலம் வாய் தொடங்கி மலத்துளை வரை நேராக அமையப்பெற்ற நீண்ட குழல் ஆகும். உணவுப்பாதையில் அமைந்துள்ள சீரண உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பின்வருமாறு:
(i) வாய்:
முன் ஒட்டுறிஞ்சியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வாய் மற்றும் வாய்க்குழி அட்டையின் முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்து உள்ளன. மூன்று ஆரத் துளைகள் பெற்றிருக்கும் அட்டையின் வாய், வாய்க்குழியுனுள் நீள்கிறது.
(ii) வாய்க்குழி:
வாய்க்குழியின் சுவரில் மூன்று தாடைகள் உண்டு. ஒரு வரிசையில் அமைந்த நுண்ணிய பற்கள் தாடைகளில் இடம்பெற்றுள்ளன. பாப்பில்லாக்கள்எனப்படும் சுவை அரும்புகள் தாடையில் இடம்பெற்றுள்ளன. இவை, உமிழ்நீர்ச் சுரப்பிகளின் திறப்பைக் கொண்டுள்ளன. வாய்க்குழியின் தொடர்ச்சியாக தொண்டை இடம்பெற்றுள்ளது.
(iii) தொண்டை:
இது தசையால் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொண்டையைச் சுற்றி உமிழ் நீர் சுரப்பிகள் அமைந்துள்ளன. தொண்டையின் தொடர்ச்சியாக குறுகியக் குட்டையான உணவுக்குழாய் தீனிப்பையுடன் இணைகிறது.
ஹிருடின் என்னும் புரதம் அட்டையின் உமிழ்நீரில் உள்ளது. இது இரத்த உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உடையது.
(iv) தீனிப்பை:
இது அட்டையின் உணவுமண்டலத்தின் மிகப்பெரிய பகுதி ஆகும். தீனிப்பையினுள் தொடர்ச்சியாக அமைந்துள்ள \(10\) அறைகள், வட்டத் துளைகள் மூலம் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. வட்டத்துளைகளை சுருக்குத்தசைகள் சூழ்ந்துள்ளன.
(v) குடல் வால் (அ) டைவர்டிகுலா:
தீனிப்பையில் காணப்படும் ஒவ்வொரு அறையின் பக்கவாட்டிலும் ஓரிணை பை போன்ற குடல்வால்கள் அமைந்துள்ளன. இவை பின்னோக்கி நீண்டுள்ளன. தீனிப்பையின் கடைசி அறை வயிற்றினுள் திறக்கிறது. தீனிப்பை மற்றும் குடல் வால் அதிக அளவில் உறிஞ்சப்பட்ட உணவை சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதன் மூலம் செரிமானம் மெதுவாக நடக்கிறது.
(vi) வயிறு:
தீனிப்பையை மலகுடலுடன் சேர்க்கும் சிறிய நேரான குடலாக இது உள்ளது.
(v) மலக்குடல்:
அட்டையின் சீரண மண்டலத்தின் கடைசி உறுப்பான மலக்குடல் மலத்துளை வழியாக உடலின் வெளிப்புறத்தில் திறக்கிறது.