அட்டை என்ற பெயரைக் கேட்டதுமே நம்மில் பலருக்கு ஒரு வித அச்சம் ஏற்படுகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு எவ்வித வலியும் ஏற்படுத்தாமல் இரத்தத்தை உறிஞ்சும் இவ்வித உயிரிகள் வளைத்தசைப் புழுக்கள் வகையைச் சார்ந்தது ஆகும்.
 
மருத்துவத்தில் அட்டைகள்:
 
அட்டைகளை சுமார் \(2800\) ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் ஆயுர்வேத சிகிச்சையில் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இரத்தக்கட்டிகளைக் கரைக்கவும், இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கவும் மேலும், ஆறாதக் காயங்களைக் குணமாக்கவும் அட்டைகள் பயன்படுகின்றன.
அட்டைகளை பயன்படுத்தும் மருத்துவ சிகிச்சை முறைக்கு ஹிருடோதெரபி (Hirudotherapy) என்று பெயர்.
அட்டைகளை புற்றுநோய் மருந்துகள் தயாரிப்பிலும் பயன்படுத்துகின்றனர்.
 
இந்தியக் கால்நடை அட்டை:
  
அட்டைப் புழுக்கள் விலங்குலத்தில் காணப்படும் முதுகு நாண் அற்ற உயிரிகளின் பிரிவைச் சார்ந்தவை ஆகும். வளைத்தசைப்புழுக்கள் தொகுதியைச் சார்ந்த இவ்வகை உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் உடலில் கண்டங்களைப் பெற்ற முதல் விலங்குகள் ஆகும். இவை, இரு பக்க சமச்சீருடைய,  உறுப்பு மண்டல அளவில் ஒருங்கமைப்புடைய உடற்கட்டமைப்பைக் கொண்ட விலங்கினங்கள் ஆகும். அட்டைகள் புற ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
 
வகைப்பாட்டு நிலை:
 
YCIND20220907_4431_Divya - Structural organisation of animals 1_01.png
அட்டையின் வகைப்பாடு
இந்தியக் கால்நடை அட்டையின்  அறிவியல் பெயர் ஹிருடினேரியா கிரானுலோசா ஆகும்.