PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அட்டையின் உடற்சுவர் ஐந்து அடுக்குகளால் ஆனது.
 
YCIND20220907_4431_Divya - Structural organisation of animals 1_03.png
அட்டையின் உடற்சுவர் அடுக்குகள்
 
1.கியூட்டிகிள் - வெளி அடுக்கு
 
இது தெளிவான, செல்கள் அற்ற சவ்வு போன்ற வெளிப்புற அடுக்காகும். அட்டையின் உடலுக்கு மென்மையான ஒரு பாதுகாப்பு சுவரை கியூட்டிகிள் ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இவை உரிந்து மீண்டும் புது அடுக்கு உருவாகும். வெளி அடுக்கின் கீழ் அமைந்துள்ள புறத்தோல் சுரப்பினால் இந்த அடுக்கு உண்டாகிறது.
 
2. புறத்தோல் - எபிடெர்மிஸ்
 
கியூட்டிகிளை ஒட்டி அடியில் காணப்படுகிறது. இது நெடுவரிசையில் ஓரடுக்காக அமையப்பெற்றத் திசுக்களாகும். இந்த அடுக்கில் தந்துகி இரத்தக் குழல்கள், வாஸ்குலார் திசுக்கள், பேரிக்காய் வடிவ சுரப்பிகள், நிறமூட்டி செல்கள் போன்றவைக் காணப்படுகின்றன.
 
3. தோல் - டெர்மிஸ்
 
புறத்தோலுக்கு கீழ் அடித்தளமாக காணப்படும் ஒரு மெல்லிய அடுக்கு இதுவாகும்.இணைப்புத் திசுக்களால் ஆன இவ்வடுக்கில் நாரிழைகள், குழல் கற்றைகள், அடர் நிறம் அளிக்கும்  நிறமி செல்கள் போன்றவை காணப்படுகின்றன.
 
Important!
கியூட்டிகிள், எபிடெர்மிஸ், டெர்மிஸ் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து அட்டையின் தோல் உருவாகின்றது.
4. தசை அடுக்கு:
  
தோலுக்கு அடியில் அமைந்திருக்கும் தசைகள் அட்டையின் உடற்சுவருக்கு திடமான ஒரு உருவத்தை அளிக்கின்றன. பெரும்பாலும் வட்ட மற்றும் நீளவாட்டு தசைகளால் இவ்வடுக்கு கட்டப்பட்டுள்ளது. பல வகையான தசை நார்கள், நெகிழத்தகு நார்கள் ஆகியவை இவ்வடுக்கில் இடம்பெற்றுள்ளன.
 
5. போட்ரியாய்டல் திசு:
 
இந்த அடுக்கு நீள் தசைகளுக்கு கீழே அமைந்துள்ளது. இத்திசுக்கள் உணவுக்குழாயைச் சுற்றி, உடற்குழி முழுவதும் நிரம்பி உள்ளது.