PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுயல்களின் கழிவு நீக்க மண்டலம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் இரண்டும் ஒரே உறுப்புகளைச் சார்ந்து இருக்கின்றன. ஆயினும் கருநிலையில் இருக்கும்போது இவ்விரண்டு மண்டலங்களும் தனித்தனியாக வளர்ச்சி அடைகின்றன. முயல்கள் பால் ஈருரு அமைப்புடைய விலங்குகளாகும்.
மனிதர்களைப்போலவே முயல்களும் ஆண், பெண் எனத் தனித்தனியே இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றவை ஆகும்.
பால் ஈருருமை என்பது ஒரே விலங்கினத்தில் ஆண் மற்றும் பெண் விலங்கினத்திற்கு உடலமைப்பில் முறையான வேறுபாடுகள் பெற்றிருப்பது ஆகும்.
கழிவு நீக்க மண்டலம்
சிறுநீரகம்:
இரண்டு சிறுநீரகங்கள் முயலின் வயிற்றறையில் உள்ளன. கருஞ்சிவப்புநிறத்தில், அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. இவை மெட்டாநெஃப்ரிக் வகையைச் சார்ந்த சிறுநீரகங்கள் ஆகும்.
பாலூட்டிகளில் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகங்கள் காணப்படுகின்றன.
மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகங்கள் என்பவை உயிரினம் கருவில் இருக்கும்பொழுதே வளர்ச்சியுறும், நிரந்தர செயல்பாடுள்ளக் கழிவுநீக்க உறுப்புகள் ஆகும்.
நெஃப்ரான்கள்:
ஒவ்வொரு சிறுநீரகமும் பல மில்லியன் எண்ணிக்கையில் காணப்படும் நெஃப்ரான் எனப்படும் நுண்ணிய நாளங்களைக் கொண்டதாகும். இவை இரத்தத்தில் இருந்து நைட்ரஜன் சார்ந்த கழிவுப்பொருட்களை பிரித்தெடுத்து, யூரியா வடிவில் வெளியேற்றுகின்றன.
சிறுநீரக நாளங்கள்:
இரண்டு சிறுநீரகங்களில் இருந்தும் புறப்படும் சிறுநீரக நாளங்கள், சிறுநீர்ப்பையின் பின்புறத்தில் திறக்கின்றன.
சிறுநீர்ப்பை:
சிறுநீரகங்களில் வடிகட்டி அனுப்பப்படும் கழிவுநீரான சிறுநீரை சேகரித்து வைக்கும் தசையாலான பை போன்ற அமைப்பு ஆகும். இது சிறுநீர்ப்புறவழி மூலம் உடலுக்கு வெளியே திறக்கிறது.
முயலின் கழிவு நீக்க மண்டலம்