PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முயல் என்றதும் நம் அனைவருக்கும் அடர்ந்த உரோமங்களுடன் தாவித் தாவிச் செல்லும் விலங்கின் உருவம் நினைவிற்கு வரும். சாந்தமான விலங்காக கருதப்படும் முயல்கள் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியவை ஆகும். முயல்கள் வீட்டிலும் செல்லப்பிராணிகளாய் வளர்க்கப்படுகின்றன.
 
OryctolaguscuniculusTasmania2.jpg
முயல்
 
முயல் ஒரு பயந்த சுபாவமுள்ள விலங்காகும். வேட்டையாடும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் விரும்பி உண்ணக் கூடியது முயலின் இறைச்சியாகும். எனவே, இவ்விலங்குகள் எப்பொழுதும் அச்சத்துடனும், விழிப்புடனும் இருக்கின்றன. இவ்விலங்குகள், எதிரிகள் வரும் திசை மற்றும் சலனங்களை உற்று கவனிப்பவை. காதுகள் விறைப்புடனும், கண்கள் கூர்மையாகவும் நோக்கக் கூடியவை.
 
வாழிடம்:
 
இவை வளையில் போன்று, நிலத்தில் குழிபறித்து இருப்பிடம் அமைக்கின்றன. பெரும்பாலும் கூட்டமாக வாழ்கின்றன. தாவி இடம்பெயரக்கூடிய இவ்விலங்குகள் புல், முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளையும், கீரைகளையும் உணவாக உண்ணுகின்றன. ஐரோப்பாவை பிறப்பிடமாகக் கொண்ட முயல்கள் இன்று உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
 
வகைப்பாடு:
 
பாலூட்டி வகுப்பைச் சார்ந்த முயல்கள் வெப்ப இரத்த விலங்குகள் ஆகும். இவை, லேகோமார்ஃபா என்னும் வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முயலின் வகைப்பாட்டு நிலை பின்வருமாறு:
 
YCIND20220907_4452_Divya - Structural organisation of animals 2_14.png
முயலின் வகைப்பாட்டு நிலை
 
முயல்  ஓரிக்டோலேகஸ் என்னும் பேரினத்தையும், கியூனிகுலஸ் என்னும் சிற்றினத்தையும் சார்ந்தது. எனவே,
முயலின் அறிவியல் பெயர்  ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் ஆகும்.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Oryctolagus_cuniculus_Tasmania_2.jpg