PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பருப்பொருள் (Matter):
  
நம்மைச்சுற்றி நாம் காணும் இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறை கொண்டதுமான ஒன்றையே நாம் பருப்பொருள் என அழைக்கிறோம்.
வெப்பம், ஒளி மற்றும் ஒலி போன்றவை, நிறையைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவை பருப்பொருட்கள் இல்லை.
 
பருப்பொருட்கள் என்பவை எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன என உங்களுக்குத் தெரியுமா?
பருப்பொருட்கள் அனைத்தும் வெறும் கண்களால் பார்க்க இயலாத நுண் துகள்களால் ஆனவை என முன் வகுப்புகளில்  நாம் படித்திருக்கின்றோம்.
Asset 1.png
 
இந்த நுண் துகள்களின் அமைப்பு பற்றியும், அவற்றின் பண்புகள் பற்றியும் இப்பாடப்பிரிவில்  நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.
  
அணு (Atom):
  
நாம் பயன்படுத்தக்கூடிய பென்சிலின் கூர் முனையானது  கிராபைட், கார்பன் என அழைக்கப்படும் தனிமத்தினால் ஆனது. இதனை நாம் மேலும் சிறிய துகள்களாக உடைத்துப் பார்க்க  இயலும். மிகச்சிறந்த கத்தியினை வைத்து  மிக நுண்ணிய துகள்களாக உடைத்துப் பார்க்க இயலும். இவ்வாறு உடைத்துப் பார்க்க இயலும்போது, ஒரு அளவிற்குப் பிறகு அந்நுண்ணிய துகள்கள் கார்பனின் பண்பினை வெளிப்படுத்த மாட்டா.
ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அத்தனிமத்தின் மிக நுண்ணிய துகளே அத்தனிமத்தின் அணு  என்று அழைக்கப்படுகிறது.
அனைத்துப் பருப்பொருட்களும் அணு என அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்களால் ஆனவை. நீர், அரிசி உட்பட நம்மைச் சுற்றி காணப்படும் அனைத்து பருப்பொருட்களும் அணுக்களால் ஆனவை.
அணு என்பது பருப்பொருளின் அடிப்படை அலகு ஆகும்.
மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டும் நம்மால் அணுக்களைக் காண முடியாது. இருந்த போதிலும் நவீன கருவிகள் ஒரு பருப்பொருளின் மேற்பரப்பில் அணுக்கள் எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் என நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகின்றன.
 
  Asset 5.png
 
மூலக்கூறுகள் (Molecules):
ஒரு அணுவானது மற்றொரு அணு அல்லது அணுக்களுடன் சேர்ந்து  உருவாக்கும் கூட்டுப்பொருள் மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் வேதிபிணைப்பினால் மூலக்கூறு உருவாகிறது.
 
நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயுவானது இரண்டு ஆக்சிஜன் அணுக்களின் வேதி பிணைப்பினால் ஆக்சிஜன் மூலக்கூறு உருவாகிறது.
 
Asset 2.png
 
இவ்வாறு மூன்று ஆக்சிஜன் அணுக்களின் வேதி பிணைப்பினால் ஓசோன் (\(O_3\)) உருவாக்கப்படுகிறது.
 
Asset 3.png
 
நாம் குடிக்கும் நீர் (\(H_2O\)) மூலக்கூறானது ஒரு ஆக்சிஜன் (\(O\)) அணு மற்றும் இரண்டு ஹைட்ரஜன் (\(H_2\)) அணுக்களின் வேதி இணைப்பினால் உருவாகிறது.
 
Asset 4.png
 
ஒரே வகையான அணுக்களோ அல்லது பல்வேறு வகையான அணுக்களோ இணைந்து மூலக்கூறுகள் உருவாகின்றன.