PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு விதமான வழிமுறைகளை விவரிக்கவும். பொருத்தமான உதாரணங்களைக் கொடுக்கவும்.
 
தனிமங்களின் குறியீட்டில் எழுத்துகள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் பெயரின் முதல் எழுத்து கொண்டு குறிக்கப்படுகிறது.

உதாரணமாக ஆக்சிஜனின் குறியீடு \((O)\) எனவும், ஹைட்ரஜனின் குறியீடு \((H)\) எனவும் குறிக்கப்படுகின்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும்போது அத்தனிமத்தின் எழுத்துகளைக் குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு எழுதும்போது முதல் எழுத்தைப் பெரிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தைச் சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.

உதாரணமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற இரண்டு தனிமங்களின் முதல் எழுத்தும் \((H)\) ல் தொடங்குவதால், ஹைட்ரஜனை \((H)\) எனவும் ஹீலியத்தை \((He)\) எனவும் குறிக்கிறோம். அதேபோல் கார்பனின் குறியீடு \((C)\), கால்சியம், குளோரின், குரோமியத்தின் குறியீடுகள் முறையே \((Ca)\), \((Cl)\), \((Cr)\) என்று குறிக்கப்படுகின்றன.

சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் பெயர்களிலிருந்து பெறப்பட்டவை.
உதாரணமாக, தங்கத்தின் குறியீடு \((Au)\) என்பது அதன் பெயரான ‘ஆரும்’ என்பதிலிருந்தும், தாமிரத்தின் குறியீடு \((Cu)\) அதன் இலத்தீன் பெயரான ‘குப்ரம்’ என்பதிலிருந்தும் பெறப்பட்டது ஆகும்.