PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இன்ங்ஸ்கேப் (INKSCAPE) மென்பொருளைப் பயன்படுத்தி வெக்டர் படங்களை வரைதல்:
 
இன்ங்ஸ்கேப் மென்பொருளானது நாம் வெள்ளைத்தாளில் வரைந்த படங்களை வெக்டர் படங்களாக மாற்ற பயன்படுகிறது.
 
YCIND18052022_3715_Tamil_Screenshot_11.png
 
படி 1:
 
முதலில் நாம் வரைந்த படத்தினை வருடி (Scanner) மூலமாக ஸ்கேன் செய்ய வேண்டும்.
 
YCIND18052022_3715_Tamil_Screenshot_13.png
 
படி 2:
 
பின்னர் 'இங்க்ஸ்கேப்' மென்பொருளில் அதனைத் திறக்க வேண்டும். படம் முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
 
YCIND18052022_3715_Tamil_Screenshot_14.png
 
படி 3:
 
Path எனும் தேர்வில் Trace Bitmap என்பதைக் கிளிக் செய்யவும்.
 
YCIND18052022_3715_Tamil_Screenshot_15.png
 
படி 4:
 
தோன்றும் சிறிய திரையில் வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு, பின் UPLOAD செய்தபின், OK கொடுக்கவும்.
 
YCIND18052022_3715_Tamil_Screenshot_16.png
 
படி 5:
 
பிறகு, Trace Bitmap திரையினை மூடவும். தற்போது திரையில் உள்ள படத்தைக் கிளிக் செய்து இழுத்தால் நாம் வரைந்த படத்தின் வெக்டர் படம் கிடைத்துவிடும். அதனை SAVE செய்ய Save Buttonஐக் கிளிக் செய்து விரும்பிய கோப்பில் சேமித்துக் கொள்ளலாம்.
 
YCIND18052022_3715_Tamil_Screenshot_17.png