PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google PlayTheory:
கோப்புகளை உருவாக்குதல்:
விண்டோஸ் (Windows) மற்றும் லினக்ஸ் (Linux) ஆகியவை பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருள்கள் ஆகும். இவற்றின் மூலம் குறிப்புகளைச் சேகரித்தல், படங்கள் வரைதல், அசைவூட்டப் படங்கள் தயாரித்தல் போன்ற பல செயல்களை நம்மால் செய்ய இயலும்.
முன் பின் தெரியாத ஊர்களுக்குச் செல்ல ஆங்காங்கே வழிகாட்டி பலகைகளை நாம் பயன்படுத்துகிறோம். அதே போல் கணினியை ‘on’ செய்து இடப்புறம் கீழ் உள்ள START என்பதைக் கிளிக் செய்தவுடன் அதில் உள்ள அனைத்து Program களின் பட்டியலை அது காட்டும். அதில் நமக்குத் தேவையான Program ஐத் தேர்வு செய்து நமது தேவைக்கேற்ப அதில் கோப்புகளை உருவாக்க முடியும்.


கோப்புகளை உருவாக்குதல்
விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினிகளில் Notepad செயலியானது நம் குறிப்புகளைச் சேகரித்து வைக்கவும் , Paint என்னும் செயலியை படங்கள் வரையவும் நாம் பயன்படுத்தலாம்.
பெயருக்கேற்றபடி ’Notepad’ இல் தேவையான குறிப்புகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் கோப்புத் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

அது போல, Paint என்னும் செயலியில் ஒரு படத்தை உருவாக்கவோ, உருவாக்கிய படங்களை Edit செய்யவோ இயலும்.
இந்தப் படங்களைக் கொண்டு எவ்வாறு படத்தொகுப்பு அசைவூட்டப் படங்கள் மற்றும் வரைகலை படங்களை எளிமையாக உருவாக்குவது என்பது பற்றி இனிக் காண்போம்.
Reference:
https://pxhere.com/en/photo/722550