PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playகாற்று, நீர், உணவு, உடல் தொடர்பு போன்ற பல்வேறு வழிகளில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும்.
தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் வேகமாகப் பரவுகிறது. நோயில்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கத் தொற்று நோய்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தொற்று நோய் பரவும் விதம்
தொற்று நோய்கள் மாசுபடுத்தப்பட்ட நீர், காற்று, உணவு மற்றும் வெக்டார்கள் மூலம் பரவுகின்றன.
Important!
வெக்டார்கள் என்பவை மனிதர்களுக்கிடையில் அல்லது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று நோய்க்கிருமிகளைக் கடத்தக்கூடிய பூச்சிகள் மற்றும் பிறவிலங்குகளாகும்.
Example:
எச்.ஐ.வி, ஹெபாடைடிஸ் ஏ, பி , சி மற்றும் டி , தட்டம்மை, இன்ஃப்ளூயன்ஸா, எபோலா, கொரோனா வைரஸ், காசநோய் மற்றும் சளி
பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்
அசுத்தமான நீர், காற்று, நுண்ணுயிரிகள் அல்லது வேறு சில உயிரினங்களின் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் ஒரு சில நோய்களான காசநோய் குறித்து இந்த கோட்பாட்டிலும், காலரா மற்றும் டைபாய்டு குறித்து இதற்கு அடுத்த கோட்பாட்டில் விரிவாகக் காண்போம்.
காசநோய்
காசநோய்ப் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படும், ஒரு தொற்று நோயாகும்.
நோய்க் காரணி
காசநோய், மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே
நோய் பரவும் முறை
நோயாளியின் எச்சில், சளி அல்லது அவர்களின் உடைமைகள் மூலமாக காச நோயைப் பரப்பும் கிருமிகள், ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாகக் காற்றின் மூலம் பரவுகின்றன.

காசநோய் பரவும் விதம்
அறிகுறிகள்
- காய்ச்சல்
- எடை இழப்பு
- நாள்பட்ட இருமல்
- இரத்தத்துடன் கூடிய சளி
- சுவாசிப்பதில் சிரமம் போன்றவை காசநோயின் சில அறிகுறிகளாகும்.

காசநோயின் அறிகுறிகள்
காசநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை
- BCG (Bacilli Calmette-Guerin) தடுப்பூசியைப் பயன்படுத்துதல் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.
- தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளான DOT (Directly Observed Therapy) போன்றவற்றைப் பயன்படுத்துதல் மூலமும் நோயைத் தடுக்கலாம்.
- இருமல் அல்லது தும்மலின் போது எப்போதும் வாயைத் துணி அல்லது கைக்குட்டையால் மூட வேண்டும்.
- நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குச் சிறப்புக் கவனம் செலுத்துதல் மிக அவசியம்.