PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Play- தோலின் மேற்பரப்பில் சேதம் ஏற்படும் பகுதிகளையே வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள் என்று அழைக்கிறோம்.
- தோல் கிழிந்து தசையின் திசுக்கள் பாதிக்கப் படுவதை வெட்டுக்காயம் என்கிறோம்.
- கீழ் திசுக்களில் ஊடுருவாத தோலின் மேற்பரப்பு சேதம் கீறல் என்று அழைக்கப்படுகிறது.

விரலில் வெட்டு காயம்
ஒரு நபரின் உடம்பில் வெட்டுக்கள் மற்றும் கீறல்கள் இருந்தால் அவற்றில் இரத்தக் கசிவு, நோய்த்தொற்று, தோல் சிவந்து போதல் அல்லது வடுக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தோலில் கீறல்கள் காயம்
வெட்டுக்காயங்களுக்கு முதலுதவி
ஒரு நபருக்குச் சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டால் அந்த பகுதிகளைச் சுத்தமான நீரில் கழுவி, கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெட்டுக் காயம் ஏற்பட்ட இடங்களைக் கிருமி நாசினி களிம்பு கொண்டு தடவி கட்டுத்துணியால் காயம் பட்ட இடத்தைச் சுற்றிக் கட்ட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று பிற பகுதிகளுக்குப் பரவுவதை எளிதாகத் தடுக்கலாம். வெட்டுக்கள் ஆழமாக இருந்தால், அவற்றைச் சுத்தமான பருத்தித் திண்டு (cotton pad) மூலம் அழுத்திப் பிடித்து உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தூய்மை மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள்
- காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உதவுவது மிகவும் முக்கியம். ஆனால் அதே நேரத்தில், எச்.ஐ.வி மற்றும் பிற இரத்தம் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதும் கட்டாயமாகும். எனவே, காயமடைந்த ஒருவரைக் காப்பாற்றும் போது அவருடைய காயங்களிருந்து இரத்தம் சிந்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவே அச்சமயத்தில் நாம் கைகளில் கையுறைகள் அல்லது சுத்தமான நெகிழிப் பையை அணிவது கட்டாயமாகும்.
- நாம் உதவி செய்யும் நபரைச் சுற்றி ஊசிகள் அல்லது கூர்மையான பொருட்கள் ஏதாவது இருந்தால் அவை நம்மைச் சேதப்படுத்தாமலிருக்க, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.